இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது. அமெரிக்காவின் தனியார் நிறுவனமான ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைலுக்கு சொந்தமான 6.1 டன் எடை கொண்ட ப்ளூபேர்ட்-6 (ப்ளூபேர்ட் பிளாக்-2) செயற்கைக்கோளை இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட் என அழைக்கப்படும் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து டிசம்பர் 24-ம் தேதி காலை 8.55 மணிக்கு ராக்கெட் விண்ணை நோக்கி பாய்ந்தது. இந்த ஏவுதல் முழு வெற்றி அடைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
இஸ்ரோவின் வணிகப் பிரிவான என்எஸ்ஐஎல் மூலம் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதுவரை இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட்டில் செலுத்தப்பட்டதிலேயே அதிக எடை கொண்ட வெளிநாட்டு செயற்கைக்கோள் இதுவாகும். இதுபோன்ற அதி எடை செயற்கைக்கோள்கள் இதற்கு முன்பு பிரெஞ்சு கயானாவில் இருந்து தான் ஏவப்பட்டு வந்தன.
இதையும் படிங்க: விண்ணில் சீறியது இஸ்ரோவில் பாகுபலி! வெற்றிகரமாக வானில் பாய்ந்தது புளூடேர்ட் -6 ! இஸ்ரோ சாதனை!
தற்போது இஸ்ரோவின் திறன் வளர்ச்சியால் இந்திய மண்ணில் இருந்தே இத்தகைய பெரிய செயற்கைக்கோள்கள் ஏவப்படுகின்றன. இது உலகளாவிய ராக்கெட் ஏவுதல் சந்தையில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்துவதாக உள்ளது.
A significant stride in India’s space sector…
The successful LVM3-M6 launch, placing the heaviest satellite ever launched from Indian soil, the spacecraft of USA, BlueBird Block-2, into its intended orbit, marks a proud milestone in India’s space journey.
It strengthens… pic.twitter.com/AH6aJAyOhi
— Narendra Modi (@narendramodi) December 24, 2025
ப்ளூபேர்ட்-6 செயற்கைக்கோள் செல்போன் தொடர்பு சேவைக்காக வடிவமைக்கப்பட்டது. இது விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட்போன்களுக்கு அதிவேக இணையம் மற்றும் தொடர்பு சேவைகளை வழங்கும். இதன் மூலம் காடு, மலை, கடல் போன்ற இடங்களிலும் 5ஜி சேவைகள் கிடைக்கும்.
இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில், "இந்தியாவின் விண்வெளித் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் கனமான செயற்கைக்கோளான ப்ளூபேர்ட் பிளாக்-2 விண்கலத்தை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பெருமைமிக்க மைல்கல்.
இது இந்தியாவின் அதிக எடை ஏவுதல் திறனை வலுப்படுத்துகிறது மற்றும் உலக சந்தையில் நமது பங்கை உறுதிப்படுத்துகிறது. தற்சார்பு இந்தியாவை பிரதிபலிக்கிறது. விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்!" என்று கூறியுள்ளார்.
இஸ்ரோவின் இந்த சாதனை உலக அளவில் இந்தியாவின் விண்வெளி திறனை மேலும் உயர்த்தியுள்ளது.
இதையும் படிங்க: விண்ணில் சீறியது இஸ்ரோவில் பாகுபலி! வெற்றிகரமாக வானில் பாய்ந்தது புளூடேர்ட் -6 ! இஸ்ரோ சாதனை!