தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து சமீபத்திய தகவல்கள் கவலையளிக்கின்றன.2013-ல் தமிழகத்தில் 923 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின, இது 2012-ஐ விட 19% அதிகம். 2022-ல் 421 வழக்குகள் பதிவாகின, தமிழகம் இந்தியாவில் 20-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் புள்ளிவிவரப்படி, 1971-2011 காலகட்டத்தில் இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் 873.3% அதிகரித்துள்ளன. 2023-ல் 3,084 வழக்குகள் பதிவாகிய நிலையில், 2024-ல் இது 3,233-ஆக உயர்ந்துள்ளது, அதாவது பாலியல் வன்கொடுமை வழக்குகள் 406-லிருந்து 471-ஆக அதிகரித்துள்ளன.
குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேருக்கு சாகும் வரை சிலை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு கோவையில், சீரநாயக்கன்பாளையம் பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக உறவினர்களுடன் பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது, ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இது தொடர்பாக ஏழு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட இருந்த நிலையில் இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று நீதிமன்றம் ஏழு பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க: 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... குற்றங்களின் கூடாரமான பள்ளிகள்! ஸ்டாலினை வறுத்தெடுத்த நயினார்...
அதன்படி, கைதான மணிகண்டன், கார்த்திக், ஆட்டோ மணிகண்டன், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகிய 7 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: என் கையில ஊசி போட்டாங்க! 8 வயது சிறுமியை எஸ்.ஐ. பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்?