கல்லூரி வாழ்க்கை என்பது இளைஞர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டமாகும். புதிய நண்பர்கள், சுதந்திரம், கற்றல் ஆகியவை இதன் அழகான பக்கங்கள். ஆனால், இந்திய கல்லூரிகளில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு கொடூரமான பழக்கமான ரேகிங், இந்த அழகை கலைத்து, பல மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. ரேகிங் என்பது மூத்த மாணவர்கள் புதிய மாணவர்களை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தும் செயலாகும்.
ரேகிங்கின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் தொடங்கி, இந்தியாவில் குறிப்பாக மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் பரவலாக காணப்படுகிறது. இந்தியாவில் ரேகிங் பெரும்பாலும் ஹாஸ்டல்களில் நடக்கிறது, அங்கு மூத்தவர்கள் தங்கள் ஆதிக்கத்தை காட்ட முயல்கின்றனர். வாய்மொழி துன்புறுத்தல், அவமானப்படுத்துதல், உடல் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் என பல வடிவங்களில் இது வெளிப்படுகிறது. சில சமயம் இது உயிரிழப்புகளுக்கே வழிவகுக்கிறது. ரேகிங்கின் தாக்கம் மிகவும் ஆழமானது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மன அழுத்தம், பயம், தனிமை உணர்வு, மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன.

இந்தியாவில் ரேகிங்கை தடுக்க பல சட்டங்களும் நடவடிக்கைகளும் உள்ளன. உச்ச நீதிமன்றம் 2001 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கியது. ராகவன் கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில், பல்கலைக்கழக மானியக் குழு 2009இல் கல்லூரிகளில் ரேகிங்கை தடுக்கும் விதிமுறைகள் என்ற சட்டத்தை அமல்படுத்தியது.
இதையும் படிங்க: டிக்.. டிக்..டிக்... மதுரை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பெரும் பரபரப்பு... தீவிர சோதனை...!
இதனிடையே, சென்னை மருத்துவக் கல்லூரியில் ரேகிங் கொடுமை நடந்துள்ளது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு மருத்துவ மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் குழு அமைத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரூரில் என்ன நடந்தது? உண்மை நிலவரம் குறித்து தவெக நிர்வாகிகளிடம் CBI துருவித் துருவி விசாரணை..!