கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏபரல் மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்வால் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி மறைந்தார். இதனை அடுத்து புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பிறகே வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது. இந்த ரகசிய வாக்கெடுப்பில் 133 கார்டினல்கள் கலந்துகொண்டனர். வெண்ணிற புகை வெளியேற்றப்பட்ட சில மணிநேரங்களிலேயே, புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்காம் லியோ மக்கள் முன் தோன்றினார். புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இதுவரை வட அமெரிக்காவிலிருந்து யாரும் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இவரே வட அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப்.
இதையும் படிங்க: சனிக்கிழமை நடைபெறுகிறது போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு.. வாடிகன் அறிவிப்பு..!

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், இவரை கார்டினலாக நியமித்தார் அப்போது போப்பாக இருந்த போப் பிரான்சிஸ். போப் பிரான்சிஸ் இவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்ததாகவும், அவர் போப் லியோவைச் சிறந்த தலைவராகக் கருதியதாகவும் கூறப்படுகிறது. போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தங்களது பெயரை மாற்றிக்கொள்வது மரபு. அதன்படி, இவர் "போப் லியோ 14" (Pope Leo XIV) என்று போப் ஆண்டவரின் பெயரை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் புதிய போப் பதவி ஏற்பு விழா நடந்தது. இதனை அடுத்து வாடிகனில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவி ஏற்கும் நிகழ்வு, வாடிகன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். புதிய போப் பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். போப் பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் சிங் பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில் வாடிகனில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் புதிய போப் ஆக 14ஆம் லியோ இன்று பதவியேற்றுக் கொண்டார். போப் 14ம் லியோவுக்கு போப்பின் அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் மீனவ மோதிரம் அணிவிக்கப்பட்டது. பதவியேற்பின் போது போரால் பாதிக்கப்பட்ட காசா, உக்ரைன் மக்களுக்காக போப் 14ஆம் லியோ சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: கல்லூரி விடுதிக்குள் புகுந்த போதை கும்பல்.. மாணவர்களுக்கு சரமாரி அடி.. உதை..!