தமிழகத்தில் தற்கொலை, சாலை விபத்துக்கள் மற்றும் சந்தேக மரணங்களால் உயிரிழப்பவர்களுக்கு அரசு மருத்துவமனைகளை பிரேத பரிசோதனை செய்யப்படும். இந்த பிரேத பரிசோதனைகள் அறிக்கை அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரேத பரிசோதனையை பெறுவதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்திற்கு பிரேத பரிசோதனை அறிக்கையை மூடிய நிலையில் சீல் வைத்து அனுப்பப்படும் என்றும் போலீசார் நேராகச் சென்று அறிக்கையை பெற்றுக் கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை போலீஸாருக்கும் நீதிமன்றத்திற்கும் அனுப்புவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக தெரிகிறது. பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தான் அறிக்கையில் கையொப்பமிட வேண்டும். அப்படியே அந்த மருத்துவர் வேறு மாவட்டத்திற்கும் அல்லது வேறு மருத்துவமனைக்கும் பணி மாறுதல் பெற்று சென்று விட்டால் கூட அறிக்கையில் கையொப்பமிட்டு பார்சல் மூலம் போலீசாருக்கு அனுப்பும் சூழல் ஏற்படுகிறது.

இதனால் காலதாமதம் ஏற்படுவதாகவும் நடைமுறைகளை எளிதாக வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசு ஒரு புதிய வசதியை கொண்டு வர உள்ளது. மருத்துவமனை சார்பில் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஆன்லைனில் பதிவேற்றும் செய்யப்படும் என்றும் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் வேட்டைக்கு வந்த சிங்கம் இல்ல... வேடிக்கை காட்டும் சிங்கம்! சீமான் செம கலாய்
ஆனால் இந்த அறிக்கைகளை நீதிமன்றம் மற்றும் போலீசார் மட்டுமே பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட இருப்பதாகவும் இதன் மூலம் காலதாமதம், ஊழல், சட்டவிரோத செயல்கள் தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: முடியாத சண்டை! பாமக தலைவர் அன்புமணி தான்… வழக்கறிஞர் பாலு திட்டவட்டம்..!