மேற்காசியாவில் பரபரப்பு தலைவிரித்து ஆடுது! ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியோட மூத்த ஆலோசகர் அலி லாரிஜானி, மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திச்சு, மேற்காசியாவோட தற்போதைய நிலவரத்தையும், ஈரானோட அணுசக்தி திட்டத்தையும் பற்றி பேசியிருக்கார்.
இந்த சந்திப்பு, இஸ்ரேல்-ஈரான் மோதலும், அமெரிக்காவோட தலையீடும் தீவிரமாகி இருக்கிற சூழல்ல நடந்திருக்கு. இதனால அமெரிக்காவுக்கு என்ன பின்னடைவு ஏற்படப் போகுதுனு உலகமே கவனமா பார்க்குது
ஈரானும் ரஷ்யாவும் நீண்ட நாள் நட்பு நாடுகள். இந்த சந்திப்புல, லாரிஜானி, கமேனியோட உத்தரவுபடி, மேற்காசியாவில் இஸ்ரேல்-ஈரான் மோதல், அமெரிக்காவோட அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கைகள் பற்றி விவாதிச்சிருக்கார். ஜூன் 13-ல இஸ்ரேல் ஈரானோட அணு ஆயுத தளங்களை தாக்கியது, அதுக்கு பதிலடியா ஈரான் மறுநாளே திருப்பி தாக்குதல் நடத்தியது.
இதையும் படிங்க: கவனமா இருங்க! சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்ணாதீங்க! ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்!
இதுக்கு நடுவுல, ஜூன் 22-ல் அமெரிக்கா, ஈரானோட ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் அணு ஆயுத தளங்களை குறிவச்சு வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால ஈரான் ஆத்திரமடைஞ்சு, கத்தாரில் உள்ள அமெரிக்காவோட அல்-உதய்த் விமான தளத்துக்கு மிசைல் தாக்குதல் நடத்தியது. இந்த பதற்றமான சூழல்ல, ஈரான் ரஷ்யாவை நோக்கி உதவி கேட்டிருக்கு.
புடின், இந்த சந்திப்புல, “இஸ்ரேல், அமெரிக்காவோட தாக்குதல்கள் நியாயமற்றவை, மேற்காசியாவை இன்னும் ஆபத்துல தள்ளுது”னு கண்டிச்சு, ஈரானுக்கு ஆதரவு தருவோம்னு உறுதியளிச்சிருக்கார். ஆனா, ரஷ்யாவும் ஈரானும் இந்த ஆண்டு ஜனவரியில் 20 வருஷ உடன்படிக்கை போட்டிருந்தாலும், அதுல பரஸ்பர பாதுகாப்பு உறுதி இல்லை.

புடின், “மேற்காசியாவில் அணு ஆயுத பந்தயம் ஆரம்பிக்கக் கூடாது, அது முழு பகுதியையும் அழிக்கும்”னு எச்சரிச்சிருக்கார். இதோட, ஈரானோட அணு ஆயுத திட்டத்தை அமைதியான வழில தீர்க்கணும்னு வலியுறுத்தியிருக்கார்.
இந்த சந்திப்பு அமெரிக்காவுக்கு பெரிய சவாலை உருவாக்குது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானோட அணு ஆயுத திட்டத்தை முழுசா நிறுத்தணும்னு கோரி, தாக்குதல்களை தொடருவோம்னு மிரட்டியிருக்கார். ஆனா, ஈரான் “அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம்”னு பதிலடி கொடுத்து, ரஷ்யாவோட நெருக்கத்தை அதிகப்படுத்தியிருக்கு. \
இது அமெரிக்காவோட மேற்காசிய செல்வாக்கை பலவீனப்படுத்தலாம். ஈரானோட அணு ஆயுத தளங்கள் மீதான தாக்குதல், உலக எண்ணெய் விநியோகத்துக்கு ஆபத்து ஏற்படுத்துது, குறிப்பா ஹார்முஸ் ஜலசந்தியை மூடினா, உலக எண்ணெய் விலை ஏறி, அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படலாம்.
இதோட, ரஷ்யாவோட ஆதரவு ஈரானுக்கு தைரியத்தை கொடுக்குது. ரஷ்யா, ஈரானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யுது, புஷேர் அணுமின் நிலையத்தில் 200 ரஷ்ய விஞ்ஞானிகள் வேலை செய்றாங்க. இது அமெரிக்காவுக்கு மேற்காசியாவில் புது பதற்றத்தை உருவாக்குது.
ரஷ்யாவோட இந்த நிலைப்பாடு, அமெரிக்காவை மேற்கு நாடுகளோட ஒத்துழைப்பை தேட வைக்குது, ஆனா பிரிட்டன், ஆஸ்திரேலியா மாதிரியான நாடுகள் டிரம்போட தாக்குதலை ஆதரிச்சாலும், முழு போர் வேண்டாம்னு சொல்றாங்க.
இந்த சந்திப்பு, மேற்காசியாவில் பதற்றத்தை மேலும் உயர்த்தி, அமெரிக்காவுக்கு இராஜதந்திர சவாலை உருவாக்கியிருக்கு. ஈரான்-ரஷ்யா நட்பு, அமெரிக்காவோட தனி மேலாதிக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குது. இனி இந்த மோதல் எங்கே போகும்னு உலகமே உத்து பார்க்குது!
இதையும் படிங்க: போர் நிறுத்தம் ஒரு போங்கு!! நாங்க எதுக்கும் தயார்!! ஈரான் பேச்சால் அதிகரிக்கும் பதற்றம்!!