காசாவில் முழு உடலையும் செயலிழக்க வைக்கும் புதிய கிருமி கண்டறியப்பட்டு இதுவரை சுமார் 85 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையே நடந்து வரும் போரின் காரணமாக காசாவில் மக்கள் அதிக அளவு குவிந்து வருகின்றனர். இந்நிலையில் குயிலின் பார் சின்ட்ரோம் (Guillain-Barre syndrome) எனப்படும் இந்த தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிகப்படியான மருந்துகள் செலவிடப்படுவதால் அங்கு அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேலின் போருக்கு முன்பு ஒரு வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து பேர் குய்லின்-பாரே நோய்க்குறியால் பாதிக்கப்பட்டனர், ஆனால் சமீபத்திய மாதங்களில் சுகாதார அதிகாரிகள் டஜன் கணக்கானவர்களை பதிவு செய்துள்ளனர் . இந்த நிலை நோயெதிர்ப்பு மண்டலத்தை அதன் சொந்த நரம்புகளைத் தாக்க வைக்கிறது.
இதையும் படிங்க: இஸ்ரேலின் கொடூர தாக்குதல்.. 5 பத்திரிகையாளர்கள் பரிதாப பலி.. இந்தியா கடும் கண்டனம்..!!
ஆரம்பத்தில் காய்ச்சல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுகள் ஏற்பட்டு அது மெல்ல மெல்ல சில வாரங்களுக்கு ஆளையே முடக்கிப்போடக்கூடிய பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக குழந்தைகளிடையே இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாகவும், போர் சூழ்நிலையால் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இஸ்ரேல் நடத்தி வரும் போர் தாக்குதல்கள், பசி, உணவுத்தட்டுப்பாடு போன்ற காரணங்களால் மக்கள் கொத்து, கொத்தாக உயிரிழந்து வரும் நிலையில், இந்த புது வகை வைரஸ் நோய் குழந்தைகளை குறிவைத்து முடக்கி வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சொந்த நாட்டிலேயே சதி... பிரதமர் பதவியில் இருந்து நெதன்யாகுவை ஓட, ஓட விரட்ட மாஸ்டர் பிளான்...!