மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் உள்ளது. இது ஒரு யூத நாடாகும். இந்த நாட்டை சுற்றி சுற்றி இஸ்லாமிய நாடுகள் தான் உள்ளன. தற்போது இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு உள்ளார். அண்டை நாடான பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. அதேபோல ஈரானுடனான போர் முடிவுக்கு வந்துள்ளது. லெபனோனில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லாவுடன் பிரச்சனை உள்ளது. இப்படி சுற்றி சுற்றி பல நாடுகளை இஸ்ரேல் சமாளித்துக் கொண்டிருக்கிறது. காஸா மீதான போர் இரண்டாம் ஆண்டை நெருங்கி வருகிறது. அமெரிக்கா ஆதரவோடு இஸ்ரேல் காஸாவை தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கிறது. காசாவில் உள்ள மக்கள் வேறு நாட்டுக்கு இடம்பெயர்வதுதான் ஒரே தீர்வு என பெஞ்சமின் நெத்தன்யாகு கூறி வருகிறார். மேலும் அமெரிக்கா உதவியோடு அந்த நாட்டு மக்களை வேறு நாட்டுக்கு அகதிகளாக அனுப்ப திரைமறைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படியான சூழலில் தான் இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சியை கலைக்க ராணுவ தளபதி திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை கூறியவர் யார் என்றால் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் யாயர் நெதன்யாகு தான். இவர் தற்போது அரசு பதவிகளில் எதுவும் இல்லை. இது தொடர்பாக யாயர் நெத்தன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால் ராணுவ தளபதி ஏல் ஜாமீர் இஸ்ரேல் அரசை கவிழ்க்க திட்டமிட்டிருக்கிறார்.
காசாவை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இஸ்ரேலையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் எடுக்க நினைக்கிறார். இதற்காக இஸ்ரேலில் அதிருப்தியாளர்களை வைத்து கழகத்தை ஏற்படுத்தி ராணுவம் மூலம் ஆட்சியை கட்டுப்பாட்டில் எடுக்க நினைக்கிறார் என கூறியிருக்கிறார். இது தற்போது பெரிய அளவில் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பி உள்ளது. ஆனால் நெதன்யாகுவின் மகன் யாயர் நெதன்யாகுவின் குற்றச்சாட்டை ராணுவ தளபதி இயல் ஜாமீர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கங்களில் இப்படி பதிவிட்டு என்னை அச்சுறுத்த வேண்டாம். நான் இப்படியான
இதையும் படிங்க: வான்வழியே காசாவுக்கு போன நிவாரணப் பொருட்கள்.. உதவிக்கரம் நீட்டிய கனடா..!!
அச்சுறுத்தல்களை ஒவ்வொரு முறையும் ஏற்க முடியாது. இதை அவர் எப்படி சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதிலிருந்து உங்களுக்கு என்ன கிடைக்கும்? என்னை ஏன் தாக்குகிறீர்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக பூரின் நடுவில் இதை செய்வதன் நோக்கம் என்ன என கேட்டிருக்கிறார். இன்னொரு புறம் சுதந்திர பாலஸ்தீனம் நிறுவப்படும் வரையில் ஆயுதங்களை கைவிட போவதில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் கோரிக்கைக்கு ஹமாஸ் இந்த பதிலை கொடுத்திருக்கிறது.
முன்னதாக காசா போரில் 60 நாள் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதையும் பிணைய கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை நோக்கமாக கொண்டு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மறைமுகமான பேச்சு வார்த்தைகள் கடந்த வாரம் நடந்தது. இருப்பினும் அதில் எந்த ஒரு முடிவும் இல்லாமல் அந்த பேச்சு வார்த்தை அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தான் இஸ்ரேலால் ராணுவ ரீதியாக பாதிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பு ஜெருசலத்தை தலைநகராக கொண்ட சுதந்திரமான முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசு நிறுவப்படும் வரை ஆயுத எதிர்ப்பை கைவிட முடியாது என தெரிவித்துள்ளது.
இதனால் போர் தொடரும் என்றே தெரிகிறது. இதற்கிடையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக்க வேண்டும் என்று கூறி உலகின் பல இடங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னி பாலத்தில் பல ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி தனி பாலஸ்தீன கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: எஸ்.எஸ்.ஐ. இதயம் துடிதுடித்த இடத்தில் திடீரென குவிந்த போலீஸ் உயர் அதிகாரிகள்.. என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் ஆய்வு...!