ரஷ்யாவுடன் ஐரோப்பிய நாடுகள் போரைத் தொடங்கினால், அதற்குப் பதிலடி கொடுக்கத் தங்கள் நாடும் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 28 அம்ச அமைதித் திட்டத்தை ஏற்க மறுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து, அதிபர் டிரம்ப்பின் பிரத்யேக தூதர்களுடன் அதிபர் புடின் சுமார் 5 மணி நேரம் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னரே ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார். உக்ரைன் மோதலுக்கான அமைதித் திட்டத்தை இறுதி செய்வதற்கான அமெரிக்கா தலைமையிலான முயற்சிகளை ஐரோப்பியத் தலைவர்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றனர் என்றும் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அதிபர் புடின், “அவர்களிடம் அமைதியை உருவாக்குவதற்கு எந்தத் திட்டமும் இல்லை. அவர்கள் போரின் பக்கம் உள்ளனர். ரஷ்யாவுடன் ஐரோப்பிய நாடுகள் போரைத் தொடங்கினால், நாங்களும் போரிடத் தயார்” என்று திட்டவட்டமாகக் கூறினார். இதன் மூலம், சர்வதேச அரங்கில் போர் குறித்த பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே விஜய்க்கு பேரதிர்ச்சி... உளவுத்துறை கொடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட்... புதுச்சேரி ரோடு ஷோவில் திடீர் மாற்றம்...!
மேலும், தனது இந்தியப் பயணத்தின் போது, தாமும் பிரதமர் மோடியும் இந்திய இறக்குமதிகளை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவோம் என்று புடின் தெரிவித்தார். ரஷ்யாவின் தேசிய நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படும் பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றுவோம் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக வலுவான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் இந்த எச்சரிக்கை, இரு தரப்புக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 12 வங்கிகள் இனி இருக்காது! 4 பெரிய வங்கிகள் மட்டும் தான்.. மத்திய அரசின் மெகா திட்டம்!