கம்போடியா நாட்டில் ஒரு எலி உலக சாதனை படைத்துள்ளது. கேட்கவே வியப்பாக இருக்கிறதே எலியைக் கண்டால் நமது வீடுகளில் விரட்டுவோம், பொறிவைத்து பிடித்து கொலை செய்யும் சமூகத்தில் எலியை வளர்த்து உலக சாதனைபடைக்க வைத்துள்ளனர் கம்போடியா மக்கள்.

கம்போடியாவில் உள்ள இந்த எலி-க்கு அதிகமான மோப்ப சக்தி இருப்பதால், 100க்கும் மேற்பட்ட நிலத்தி்ல் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிக்காத கன்னி வெடிகளை கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு உதவியுள்ளது. ஆப்ரிக்காவைச் சேர்ந்த இந்த எலியின் பெயர் ரோனின். இந்த எலி கம்போடியா பாதுகாப்பு படைியினருக்கு உதவியாக இருந்து கம்போடியாவின் வடபகுதியில் உள்ள பெரே பிஹால் மாகாணத்தில் 109 கன்னி வெடிகளை, பூமிக்கு கீழே வெடிக்காத வெடிகுண்டுகளையும் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: வேலை வெட்டி இல்லாத சைதை துரைசாமி...குழப்பம் ஏற்படுத்தி குளிர்காய்வதா..? கடுப்பாகும் அதிமுக நிர்வாகி..!
5 வயதாகும் ரோனின் எலி, கன்னி வெடிகளைக் கண்டுபிடித்துக் கொடுப்பதில் சிறப்புவாய்ந்தது என்று இதை வளர்க்கும் ஏபிஓபிஓ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏபிஓபிஓ அமைப்பு கூறுகையில் “ ரோனின் எலி இதுவரை 100க்கும் மேற்பட்ட பூமியில் வெடிக்காமல் புதைந்து கிடந்த கன்னிவெடிகளை கண்டுபிடித்துள்ளது, இது கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளது. மனிதர்கள் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் இந்த ரோனின் எலியின் பணியைப் பாராட்டி சான்றிதழும் தரப்பட்டு உலகசாதனையும் செய்துள்ளது. ரோனின் எங்களின் சொத்து மட்டுமல்ல, எங்கள் பணியின்போது பணியாற்று சகப்பணியாளர்” எனத் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் மகாவா என்ற எலி 71 கன்னி வெடிகளை மட்டுமே கண்டுபிடித்து கடந்த 2021ம் ஆண்டு ஓய்வு பெற்றது. அந்த சாதனையை ரோனின் எலி முறியடித்துள்ளது. மகாவா எலியின் சாதனையைப் பாராட்டி அதற்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. இந்த மகாவா எலி, 2,25000 சதுர அடி நிலப்பகுதியில் இருந்த கன்னிவெடிகளைக் கண்டுபிடித்து அழிக்க உதவியது,2022ம் ஆண்டு இந்த எலி இறந்தது. ஆனால் ரோனின் எலி பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட கன்னி வெடிகளை கண்டுபிடித்து அழிக்க உதவியுள்ளது.
கடந்த 1960களில் கம்போடியாவில் நடந்த போரின் போது ஏராளமான கன்னிவெடிகள் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டு இன்னும் வெடிக்காமல் இருக்கின்றன. இதனால் அவ்வப்போது மக்கள் கன்னிவெடியில் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.

கம்போடியாவில் 30 ஆண்டுகள் நீடித்த உள்நோட்டுப் போர் 1998ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது, உலகிலேயே அதிகமான கன்னிவெடிகள் புதைக்கப்பட்ட நாடாக கம்போடியா அறியப்பட்டது. இங்கு கன்னிவெடியில் சிக்கி மக்கள் உயிரிழப்பது இயல்பானதாக மாறத் தொடங்கி, 1979ல் களில் இருந்து 20ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், ஏராளமானோர் கை, கால்களை இழந்துள்ளனர்.

இதைத் தடுக்கும் முயற்சியில் தன்னார்வ அமைப்புகள், அரசுடன் இணைந்து கன்னி வெடி செயல் இழக்கும் பணியில் இறங்கின. இதற்காக எலிகளைப் பயன்படுத்தி கன்னிவெடிகளை கண்டுபிடிக்கத் தொடங்கி, அதற்காக மெகா எலிகளை பழக்கப்படுத்தினர். எலியின் மோப்ப சக்தியால் நிலத்தின் ஆழத்தில் இருக்கும் வெடிக்காமல் இருக்கும் கன்னி வெடிகளைக் கண்டறிந்து அதிகாரிகளுக்கு காண்பிக்கிறது. இதை பாதுகாப்பாக மீட்டு அதை அதிகாரிகள் செயல் இழக்க வைக்கிறார்கள். கம்போடியாவை கன்னி வெடி இல்லாததாக 2025க்குள் மாற்ற அந்நாட்டு அரசு உறுதி எடுத்து செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: புதுச்சேரி - திருப்பதி இடையே ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!