நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேச்சைத் தொடங்கினார். அவர் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை குறித்து பேச முயன்றபோது, 2020ஆம் ஆண்டு லடாக் மோதல்களைப் பற்றியும், டோக்லாம் பிரச்சினையைப் பற்றியும் நரவனேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்களை மேற்கோள் காட்ட முயன்றார்.
இதில், அரசு தரப்பு எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் ஓம் பிர்லா, வெளியாகாத புத்தகத்தின் விவரங்களை மேற்கோள் காட்டக் கூடாது என்று தடை விதித்தார். ஆனால் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தியதால், அவையில் கூச்சலும் போராட்டமும் தொடங்கியது. அவை பலமுறை இடைநிறுத்தப்பட்டு, அன்றைய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இன்று அவை மீண்டும் கூடியபோது அமளி தொடர்ந்தது. எதிர்க்கட்சி எம்பிக்கள் காகிதங்களைக் கிழித்து சபாநாயகர் மேடை நோக்கி வீசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது அவையின் ஒழுங்கை மீறிய செயலாகக் கருதப்பட்டது. இதையடுத்து தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதையும் படிங்க: பார்லிமென்ட்டில் ராகுல் பேச தடை... உரிமையை பறிப்பது நியாயமா? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!
அதில், அவையில் குழப்பம் ஏற்படுத்தியதற்காகbஎதிர்க்கட்சியைச் சேர்ந்த 9 எம்பிக்கள் கூட்டத் தொடரின் மீதமுள்ள காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. சபாநாயகர் இதை ஏற்று தீர்மானத்தை நிறைவேற்றினார். இதில் பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் ஆஜ்லா, ராஜா வாரிங், ஹிபி ஈடன், கிரண் ரெட்டி, வெங்கட் ராமன், சு. வெங்கடேசன் போன்றோர் இதில் அடங்குவர்.
இதையும் படிங்க: உலகத்தின் நம்பிக்கையே இந்தியா தான்..! ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கு..! பிரதமர் மோடி நம்பிக்கை...!