சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவை சுனாமி தாக்கியது. ரஷ்யாவில் இன்று அதிகாலை 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்த நிலையில் சுனாமியும் தாக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா தீவு 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதியை 4 மீட்டர் உயர அலைகளுடன் சுனாமி தாக்கியுள்ளது. ஹவாய், அலாஸ்கா, ஜப்பான், ரஷ்யாவுடைய கிழக்கு பகுதிகளில் நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள தீவை சுனாமி தாக்கியுள்ளது.
ரஷ்யாவுடைய கிழக்கு கடற்கரை பகுதியில சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். உலக அளவில் 2011ஆம் ஆண்டுக்கு பிறகாக பதிவான மிகப்பெரிய நிலநடுக்கமாக இந்த நிலநடுக்கம் என்பது பார்க்கப்படுகிறது. கம்சட்காவின் கடற்கரைப் பகுதிகளில் 3 முதல் 4 மீட்டர் வரை சுனாமி அலைகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: அஜித் இறந்துபோனதை நெனைச்சு அழுதுட்டே இருக்கேன்! நிகிதா கொடுத்த விளக்கம்...
ரஷ்யாவின் பிராந்திய அவசரகால அமைச்சர் ஆண்ட்ரி லெபடேவ், கடற்கரையோரங்களில் இருந்து விலகி இருக்கவும், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். "
ரஷ்யாவின் பசிபிக் கடற்கரை மற்றும் வடமேற்கு ஹவாய் தீவுகளின் சில பகுதிகளுக்கு 10 அடி உயரத்திற்கு மேல் அலைகள் எழும்பும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போது சகலின் பிராந்தியத்தில் உள்ள கடலோர நகரமான செவெரோ-குரில்ஸ்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றன.
மற்ற நாடுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டன. பிலிப்பைன்ஸ், பலாவ், மார்ஷல் தீவுகள், சூக் மற்றும் கோஸ்ரே ஆகிய கடலோரப் பகுதிகளில் 0.3 முதல் 1 மீட்டர் (1 முதல் 3.3 அடி) வரை அலைகள் எழும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தென் கொரியா, வட கொரியா மற்றும் தைவான் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளிலும் கூட 0.3 மீட்டருக்கும் குறைவான சிறிய அலைகள் எழும்பும் என்று கணிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சென்னையை உலுக்கிய கொலை வழக்கு - திமுக பிரமுகரின் பேரனை ரகசிய இடத்தில் வைத்து தூக்கிய போலீஸ்...!