ஹைதராபாத்தில் இருந்து மக்காவுக்கு புனித பயணம் சென்ற பயணிகளின் பேருந்து மீது டீசல் ஆரி மோதி தீப்பிடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் நிகழ்ந்த இந்த விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சவுதியில் பேருந்தும் டீசல் ஆரியம் மோதி தீப்பிடித்து விபத்தில் 42 இந்தியர்கள் பலியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மெக்காவிலிருந்து மதினாவுக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நள்ளிரவு ஒரு மணி அளவில் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. மக்கா மற்றும் மதினா புனித பயணம், இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கியமான ஆன்மீகப் பயணமாகும். இது ஹஜ் மற்றும் உம்ரா என்ற இரு வகையான புனிதப் பயணங்களை உள்ளடக்கியது. ஹஜ் என்பது இஸ்லாமின் ஐந்து தூண்களில் ஒன்றாகும், இது ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டிய கடமை.

ஹஜ் பயணத்தில் முதல் முக்கிய நிகழ்வு தவாஃப் ஆகும். இதில் யாத்ரீகர்கள் காபாவை ஏழு முறை சுற்றி வருகின்றனர், இது எதிர் கடிகார திசையில் நடைபெறும். இந்த சுற்றலின் போது அல்லாஹ்வை துதித்து, பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன. தவாஃபுக்குப் பிறகு, ஸஃபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையே ஏழு முறை நடந்து செல்லும் சஃய் நிகழ்வு நடைபெறுகிறது.
இதையும் படிங்க: மனுஷங்களா நீங்க எல்லாம்?... கண்முன் கிடந்த சடலம்... கண்டுகொள்ளாமல் மக்கள் செய்த காரியம்...!
இது ஹாஜரா என்ற பெண்ணின் தாகத்திற்கு தண்ணீர் தேடிய நிகழ்வை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது. இதன் போது ஜம்ஜம் நீரூற்றில் இருந்து தண்ணீர் குடிக்கப்படுகிறது, இது இறைவனின் அருளால் உருவானதாக நம்பப்படுகிறது. இந்த புனித பயணத்திற்கு சென்ற போது இந்தியர்கள் விபத்தில் சிக்கி இறந்ததாக கூறப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கீழே விழுந்து நொறுங்கிய சிறிய ரக பயிற்சி விமானம்..!! ஜஸ்ட் மிஸ்ஸில் விமானி எஸ்கேப்..!!