தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயற்கை வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் வகையில் சமீப காலங்களில் நடத்திய சில அசாதாரணமான நிகழ்வுகள் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, ஆடு-மாடுகள் மாநாடு மற்றும் மரங்களின் மாநாடு ஆகியவை, கிராமப்புற விவசாயிகளின் உரிமைகளை முன்னிறுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தற்சார்பு வாழ்க்கையை வலியுறுத்தும் சீமானின் புதிய அணுகுமுறையின் சின்னங்களாகத் திகழ்கின்றன. இந்த நிகழ்வுகள், சாதாரண அரசியல் பிரச்சாரங்களுக்கு மாற்றாக, இயற்கையுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் பாரம்பரிய வாழ்வியலை மீட்போம் என்ற சீமானின் உறுதிமொழியை வெளிப்படுத்துகின்றன.சீமானின் அரசியல் பயணம், தமிழ் தேசியவாதத்துடன் இணைந்து, சுற்றுச்சூழல் மற்றும் விவசாய உரிமைகளை மையமாகக் கொண்டது.
ஜூலையில் நடைபெற்ற ஆடு-மாடுகள் மாநாடு, கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை மீட்பது என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இது, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஆடுகள், மாடுகள், எருமைகள் மற்றும் செம்மறி ஆடுகள் போன்ற கால்நடைகளை பங்கேற்பாளர்களாக அழைத்து நடத்தப்பட்ட நிகழ்வாக பதிவாகியுள்ளது.

ஆடு-மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து, சீமான் அறிவித்த மரங்களின் மாநாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டது. ஆகஸ்ட் 30ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணியை அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வு, மரங்களுடன் பேசும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. தேனி மாவட்டத்தில் கால்நடைகளுக்காக பேசிய சீமான், அடுத்து மரங்களின் உரிமைகளை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அதிகாரத் திமிர்... பதவி போதை! ஏர்போர்ட் மூர்த்தி மீதான பொய் வழக்கு பாசிச வெறியாட்டம் என சீமான் ஆவேசம்
இந்த மாநாடு, மரங்களை அழிப்பதற்கான அரசியல் மற்றும் தொழில்துறை செயல்பாடுகளுக்கு எதிராக, அவற்றின் பாதுகாப்பை வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மலைகளின் மாநாடு நடத்தப்படும் என்றும் தஞ்சாவூரில் தண்ணீர் மாநாடு நடத்தப்பட இருப்பதாகவும் சீமான் அறிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு என புதிதாக நடைபெற இருக்கும் மூன்று மாநாடுகள் தொடர்பாக சீமான் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலை வெறித்தாக்குதல்! போலீஸ் இதை விரும்புதா? சீமான் ஆவேசம்