பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாட கராச்சியில் ஒரு ரோட் ஷோவை ஷாஹித் அஃப்ரிடி நடத்தினார்.
திங்களன்று கராச்சியில் நடைபெற்ற 'வெற்றி பேரணி'யில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி பங்கேற்றார். இந்த நிகழ்வில் அவர் கலந்து கொண்ட வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தான் 'இந்தியாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற்றது' என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் கூறியதைத் தொடர்ந்து இந்த வெற்றியை கொண்டாடினார் ஷாஹித் அஃப்ரிடி. பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை எனவும் அப்போது அவர் கூறினார்.
இதையும் படிங்க: அமைதியை விரும்பும் பாக்,.. சொந்த மக்களைக் கொல்லும் இந்தியா.. அப்ரிடியின் அபத்த வீடியோ..!

குறிப்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் போது, இந்திய அரசுக்கும், ஆயுதப்படைகளுக்கும் எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக ஷாஹித் அஃப்ரிடி கூறி வந்தார். பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஆதரித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒரு பேரணியை நடத்தியதற்காக முன்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டார் ஷாஹித் அஃப்ரி.
"எங்கள் ராணுவம் எப்போது தாக்குதல் நடத்துவார்கள் என்பதை உலகம் முழுவதும் எதிர்பார்த்து காத்திருந்தது. இப்போது உலகம் முழுவதும் பார்த்துவிட்டது. எங்கள் ராணுவத்துடன் சண்டையிட்டால் நீங்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் எங்கள் அப்பாவி குழந்தைகளையும், பொதுமக்களையும் கொன்றீர்கள்" என்று ஷாஹித் அஃப்ரிடி இந்தியாவுக்கு எடுத்துச் சொன்னார்.

இதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வரும் பலரும், ''வெற்றி என்பதற்கான உங்கள் வரையறை என்ன? இது வெட்கக்கேடானது. தசாப்தத்தின் நகைச்சுவை. போர் நிறுத்தத்தையும், ஐஎம்எஃப் பிணை கேட்ட பிச்சைக்காரர்கள், நாம் இன்னும் தொடங்காத போரில் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொள்கிறார்கள்.
எது வெற்றி? 12 விமான தளங்கள், 9 பயங்கரவாத முகாம்கள், 5 விமான ஜெட் விமானங்கள், 40 தனிநபர்கள், வான் பாதுகாப்பு இதையெல்லாம் இழந்துவிட்டு, போர் நிறுத்தத்திற்காக கெஞ்சிவிட்டு... இதுதான் உங்கள் வெற்றியா?
Shahid Afridi leads a rally in Karachi to celebrate Pakistan's victory. 🇵🇰
Boom Boom in support of Pakistan Army.
#PakvsIndiaWar #IndiaPakistanWar2025 #PakistanZinadabad @SAfridiOfficial pic.twitter.com/KKs2flJdPe
— Maham Gillani (@DheetAfridian) May 11, 2025
இந்தியா 20-25 பயங்கரவாத தளங்களை மட்டுமே தாக்கி 100+ பயங்கரவாதிகளை மட்டுமே கொன்றதால் கொண்டாட்டம். இந்தியா விரைவில் ஒவ்வொரு பயங்கரவாதியையும் ஒழித்துவிடும். கவலைப்பட வேண்டாம், இது 48 மணி நேர இடைவெளி மட்டுமே, முழுமையான போர் நிறுத்தம் அல்ல. அப்ரிடியின் பிரச்சனை என்னவென்றால், அவர் படிக்காதவர். எனவே அவருக்கு எந்த வரலாறும் தெரியாது. பாகிஸ்தான் பிரதமர்கள் கரப்பான் பூச்சிகளைப் போல அழிக்கப்படுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியாது'' என பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: +2 விடைத்தாள் நகல் பெற எப்போது விண்ணப்பிக்கலாம்? கடைசி நாளை அறிவித்த தேர்வுத்துறை!!