ஈரோடு அருகே வேப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி. இவரது மனைவி ருக்மணி(69). இவர்களுக்கு திருமணமான பிரியதர்ஷினி என்ற மகளும், திருமணமாகாத ரவிக்குமார் என்ற 40 வயது மகனும் உள்ளனர்.
பழனிச்சாமிக்கு சொந்தமாக சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்து பணத்தை தனக்கு தருமாறு மகன் ரவிக்குமார் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த தகராறில் கடந்த 2022 மே 2.ம் தேதி பழனிசாமியை ரவிக்குமார் அடித்து கொலை செய்தார்.
இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் ரவிக்குமார் வெளியே வந்த நிலையில், மீண்டும் நிலம் தொடர்பாக தனது தாயாருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாலை வரை ருக்மணி வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் வராண்டாவில் கட்டிலில் ருக்மணி இறந்து கிடந்துள்ளார்.
இதையும் படிங்க: தரவேண்டிய நிதியை வழங்க ரெடியா? பிரதமர் கிட்ட பதில் இருக்கா? திமுக சரமாரி கேள்வி
இது குறித்து போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மகன் ரவிக்குமார் அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து ரவிக்குமாரை போலீசார் கைது செய்தனர். B.E பட்டதாரியான ரவிக்குமார் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதும் தாயை தாக்குவதும் வழக்கமாக நடந்து வந்துள்ளது. அதைப்போலவே நடந்த தாக்குதலில் ருக்மணி உயிரிழந்துள்ளார்.
சொத்துக்காக தந்தையை அடித்து கொலை செய்த மகன் தற்போது தாயையும் அடுத்து கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வரலாற்றில் மோடி! இது உன்னதமான தருணம்... பிரதமரின் சோழ தேச வருகை குறித்து அண்ணாமலை பெருமிதம்