பெங்களூரு: இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், இன்போசிஸ் அறக்கட்டளை தலைவருமான சுதா மூர்த்தி, தனது பெயரை பயன்படுத்தி இணையத்தில் பரவி வரும் போலி வீடியோக்கள் குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "நான் ஒருபோதும் முதலீடு அல்லது பணம் சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேசுவதில்லை. அத்தகைய வீடியோக்கள் போலியானவை. யாரும் நம்பி ஏமாற வேண்டாம்" என்று அவர் வீடியோ ஒன்றில் கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் போலி வீடியோக்களில் சுதா மூர்த்தி, நாராயண மூர்த்தி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை போன்றோர் பேசுவது போன்று தோற்றமளிக்கும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளது. "200 டாலர் அல்லது 20,000 ரூபாய் முதலீடு செய்தால் 10 மடங்கு வரை லாபம் கிடைக்கும்" என்று கூறி, ஒரு லிங்க் மூலம் பணத்தை ஏமாற்றி பறிக்கும் மோசடி கும்பல் செயல்பட்டு வருகிறது. இதனால் பலர் பணத்தை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சுதா மூர்த்தி வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியதாவது: "வணக்கம், நான் சுதா மூர்த்தி. மிகுந்த கவலையுடனும் வேதனையுடனும் இதைத் தெரிவிக்கிறேன். பேஸ்புக்கில் என் பெயரில் போலி வீடியோக்கள் பரவி வருகின்றன. 2-3 வீடியோக்கள் ஒரே நேரத்தில் பரவுகின்றன. அதில் நான் 200 டாலர் அல்லது 20,000 ரூபாய் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று பேசுவது போல உள்ளது. இது முற்றிலும் போலியானது. எனக்கு தெரிந்த பலர் இதில் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கனிமொழிக்கு என்னதான் பிரச்னை?! ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னதுல உடன்பாடு இல்ல! தெறிக்கவிடும் அண்ணாமலை!
I want to alert you to fake videos circulating online that falsely use my image and voice to promote financial schemes and investments. These are deepfakes created without my knowledge or consent.
Please do not make any financial decisions based on these fraudulent videos. I urge… pic.twitter.com/JyJTIR78wQ
— Smt. Sudha Murty (@SmtSudhaMurty) January 21, 2026
முதலில் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் - இத்தகைய வீடியோக்களை நம்பாதீர்கள். நான் ஒருபோதும் முதலீடு, பணம் சம்பாதிக்கும் வழிகள் பற்றி பேசுவதில்லை. நான் கலாசாரம், பெண்கள் மேம்பாடு, கல்வி பற்றி மட்டுமே பேசுகிறேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வங்கியில் கேளுங்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லுங்கள். அது போலியானது என்று உறுதியாக தெரிவிப்பார்கள்.
கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் - என் பெயரில் வரும் எந்த நிதி பரிவர்த்தனை தகவலையும் நம்பாதீர்கள். உங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்காதீர்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். சிக்கல் இருந்தால் நேரில் வங்கி அல்லது போலீஸாரை அணுகுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிதி வல்லுனர்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், "இத்தகைய டீப் ஃபேக் வீடியோக்கள் மூலம் மோசடி அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் யாரும் லிங்க் கிளிக் செய்து பணம் அனுப்ப வேண்டாம். உடனடியாக சைபர் க்ரைம் போலீஸாரை தொடர்பு கொள்ளுங்கள்" என்று எச்சரித்துள்ளனர். சுதா மூர்த்தியின் இந்த எச்சரிக்கை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. மநீமவுக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்..!! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!