ஆப்கானிஸ்தான் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் தங்களது பேண்ட்டைக் கூட பறிகொடுத்துவிட்டு தெறித்து ஓடியதாக தாலிபான்கள் வெளியிட்டுள்ள வீடியோ பாகிஸ்தானை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 15 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தாலிபான்கள் குற்றச்சாட்டியுள்ளனர். பாகிஸ்தானின் நடவடிக்கைகளால் கோபமடைந்த தாலிபான்கள், பாகிஸ்தான் மீது எதிர் தாக்குதலை நடத்தினர்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமான போர் சூழல் உருவான நிலையில், எதிர்பாராத விதமாக இரு தரப்பினருக்கும் இடையே 48 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனிடையே பாகிஸ்தானின் கோழைத்தனமான செயல்களை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக சில வீடியோக்களை ஆப்கானிஸ்தானியர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதாவது தாலிபான்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், “துண்டைக் காணோம், துணியைக் காணோம்” என ஓட்டம் பிடித்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் போருக்கு பிரேக்... அமலானது 48 மணி நேர போர் நிறுத்தம்...!

பாகிஸ்தான் காபூல் மற்றும் காந்தஹாரைத் தாக்கியது ஆப்கானிஸ்தான் மக்கள் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து ஸ்பின் போல்டாக் அருகே உள்ள பாகிஸ்தான் இராணுவ புறக்காவல் நிலையங்கள் மீது தாலிபான் படைகள் மின்னல் வேக தாக்குதலை நடத்தின . இதன் விளைவாக, பாகிஸ்தான் வீரர்கள் தப்பி ஓடிவிட்டனர். சில பாகிஸ்தான் வீரர்கள் தாலிபான் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், புறக்காவல் நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, தாலிபான் படைகள் ஏராளமான ஆயுதங்கள், பாகிஸ்தான் வீரர்களின் உடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களைக் கைப்பற்றின. அதன் பிறகு, நங்கர்ஹார் மாகாணத்தில் பாகிஸ்தான் வீரர்களின் பேண்ட்களை மக்கள் முன்னிலையில் பொது இடத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர். அங்கு கூடியிருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் தாலிபான்கள் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்புகின்றனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
So called Social media Army Pakistan army exposed in front of the world,
Afghan Taliban displaying pants of Pakistan Army soldiers who were captured by Afghanistan in the recent border clashes. pic.twitter.com/UCPXq6lmcC
— Abhishek Singh Sikarwar (@flashabhishek) October 15, 2025
பாகிஸ்தான் வீரர்களின் சீருடைகளை தலிபான்கள் காட்சிப்படுத்திய காட்சிகளை பிபிசி பத்திரிகையாளர் தாவூத் ஜுன்பிஷ் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். பாகிஸ்தான் இராணுவம் தப்பி ஓடிய புறக்காவல் நிலையங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பேன்ட்களை தலிபான்கள் காட்சிப்படுத்துவதாக அவர் பதிவிட்டுள்ளார். இது பாகிஸ்தானுக்கு ஒரு பயங்கரமான அவமானமாக விவாதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் போருக்கு பிரேக்... அமலானது 48 மணி நேர போர் நிறுத்தம்...!