இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், மூத்த தலிபான் தலைவரும் பாகிஸ்தானுக்கான முன்னாள் ஆப்கானிஸ்தான் தூதருமான முல்லா அப்துல் சலாம் ஜாயீப் எக்ஸ்தளத்தில், ''ஜிஹாத்' என்ற பெயரில் பாகிஸ்தான் தனது அரசியல் விளையாட்டில் அவர்களை சிக்க வைக்கக்கூடாது என்று பஷ்டூன்களை எச்சரித்துள்ளார்.

''இந்த சண்டை ஜிஹாத் அல்ல. ஆனால் பாகிஸ்தானின் அரசியல் சூழ்ச்சி.இ ந்த தவறான ஜிஹாத்திலிருந்து தங்கள் குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும்'' என்று பஷ்டூன் குடும்பங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். ''இந்த நேரத்தில் இந்தியாவுடன் நடந்து வரும் பதற்றத்தில் தலிபான்களுக்கு அனுதாபத்தைப் பெற பாகிஸ்தான் முயற்சி செய்யலாம். ஆனால் ஆப்கானிஸ்தான் போராளிகள் அதில் பங்கேற்கக்கூடாது'' என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தாலிபான்கள் பாகிஸ்தானுடன் பழைய உறவைக் கொண்டுள்ளனர். ஆனால் இப்போது அவர்களது தொனி மாறிவிட்டது. பெரும்பாலும் பஷ்டூன்களின் அமைப்பான தாலிபான்கள், பாகிஸ்தானுடன் பழைய உறவைக் கொண்டிருந்தனர். ஒரு காலத்தில் இருவருக்கும் இடையிலான உறவு வலுவாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது தொனி மாறி வருவதாகத் தெரிகிறது.ஜயீப்பின் அறிக்கை இந்த மாறிய அணுகுமுறையை சுட்டிக்காட்டுகிறது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதலில் தலிபான்கள் இனி 'சிப்பாய்' ஆக விரும்பவில்லை என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: பாகிஸ்தானால் படிந்த ரத்தக்கறை... நண்பனை எதிரியாக்கி வன்மம் தீர்க்கும் இந்தியாவின் புதிய யுக்தி..!
செவ்வாய்க்கிழமை இரவு ஆபரேஷன் சிந்தூரின் கீழ் பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத தளங்களை இந்தியா தாக்கியது. இதில், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 26 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர், எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. நேற்றிரவு முதல், பாகிஸ்தான் இந்தியாவின் பல நகரங்களைத் தாக்க முயற்சித்து வருகிறது. ஆனால் இந்தியா அதன் அனைத்து திட்டங்களையும் முறியடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையில், ஜயீப்பின் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் ஆப்கானிஸ்தானின் வர்த்தகத்தையும் பாதிக்கிறது. அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அனுப்ப வேண்டிய பொருட்கள் நிறைந்த கொள்கலன்கள் வாகா எல்லையில் சிக்கியுள்ளன. உலர் பழங்களைக் கொண்ட எங்கள் லாரிகளில் பல எல்லையில் சிக்கியுள்ளன என்று ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் கூட்டு வர்த்தக சபையின் தலைவர் நகிபுல்லா சஃபி கூறினார்.

இந்த நிலைமை நீண்ட காலம் தொடர்ந்தால், அது ஆப்கானிய வர்த்தகத்தை பாதிக்கும். தலிபான்கள் இப்போது ஒரு பொறுப்பான அரசாங்கமாக தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள் என்பது ஜயீப்பின் அறிக்கையில் இருந்து தெளிவாகிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எந்தவொரு மோதலிலிருந்தும் விலகி இருப்பதன் மூலம், தலிபான்கள் அதன் நிலைத்தன்மையையும் பிராந்திய சமநிலையையும் பராமரிக்க விரும்புகின்றன.
இதையும் படிங்க: தலிபான் அரசை இந்தியா ஏற்றுக்கொண்டதா..? தலிபான் தலைவருடன் இந்தியப் பிரதிநிதி சந்திப்பு..!