பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை ஆயுதங்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட வந்த இரு நாடுகளும் தற்போது வார்த்தை போரில் குதித்துள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே நடந்த கடுமையான மோதலில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் வீரர்கள் பலியாகினர். அதன் பின்னர் கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தலையிட்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்துள்ளன.
ஆப்கானிஸ்தானுடனான பதட்டங்கள் தணிந்த போதிலும், தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பு பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து வருகிறது. 2007 இல் உருவாக்கப்பட்ட இந்த போராளிக்குழு பாகிஸ்தான் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்து வருகின்றனர். பாகிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர். பயங்கரவாதிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்த அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கூட்டணி வைப்பதையும் இது கடுமையாக எதிர்க்கிறது. பாகிஸ்தான் அரசை வலுவிலக்கச் செய்வதற்காக இந்த போராளிகள் குழு நூற்றுக்கணக்கான தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனால் அப்படியொரு போராளி அமைப்பே ஆப்கானிஸ்தானில் இல்லை என தாலிபான்கள் அரசு உலக அரங்கில் வாதிட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீருக்கு தாலிபான்கள் சவால் விடுத்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) பாகிஸ்தான் ராணுவம் தங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என தொடர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு எச்சரித்து வருகிறது. அந்த வீடியோக்களில், பாகிஸ்தான் வீரர்களை சாவதற்காக அனுப்ப வேண்டாம் என்று தாலிபான்கள் எச்சரித்துள்ளனர். அதற்கு பதிலாக, ஆம்பளையாக இருந்தால் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் தங்களுடன் நேரடியாகப் போரில் ஈடுபடுமாறு சவால் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரு கிலோ தக்காளி விலை இவ்வளவா? - அதள பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்...!
இந்த காணொளியில் பேசுவது தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் உயர் தளபதி காசிம் தான் என்று பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அக்டோபர் 8 ஆம் தேதி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குர்ரம் பகுதியில் TTP தீவிரவாதக் குழு பாகிஸ்தான் வீரர்களைத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் 22 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக TTP கூறியது. வெளியிடப்பட்ட சமீபத்திய வீடியோவில், தாக்குதல் தொடர்பான காட்சிகளைக் காட்டி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும், தாக்குதலில் எத்தனை பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், 11 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் தளபதி காசிமை பிடித்துக் கொடுத்தால் 100 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் வழங்குவதாக பாகிஸ்தான் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 3 நாட்களாக தூக்கத்தை தொலைத்த பாக்., மக்கள்... தொடர்ந்து குலுங்கிய பூமி... நிபுணர்கள் விடுத்த அதி பயங்கர எச்சரிக்கை...!