மின்சார கார்களின் உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார் எலான் மஸ்க். பறக்கும் திறன் கொண்ட டெஸ்லா ரோட்ஸ்டர் காரை அவர் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மெக்ரிகர் SpaceX சோதனை மையத்தில் இந்த அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.டெஸ்லா மற்றும் SpaceX நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் புதிய ரோட்ஸ்டர், மின்சார சூப்பர் கார்களின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
SpaceX தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பொருத்தப்பட்ட குளிர் வாயு த்ரஸ்டர்கள் மூலம் இந்தக் கார் சுருக்கமான தூரங்களுக்குப் பறக்கும் திறன் பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் காட்டப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், கார் மேல்நோக்கிச் சென்று தலைகீழாக நின்றது. பின்னர் காற்றில் சுழன்று பாதுகாப்பாக தரையிறங்கியது. மேலும் பிற டெஸ்லா வாகனங்களின் மேல் தாவிச் செல்லும் அற்புதமான காட்சிகளும் வெளிப்பட்டன.

இந்தக் காரின் வேகத் திறன் குறித்தும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மணிக்கு 370 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய உச்ச வேகம் கொண்டதாகக் கூறப்படுகிறது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 96 கிலோமீட்டர் வேகத்தை ஒரு வினாடிக்குள் எட்டும் திறனும் இதற்கு உண்டு என நிகழ்ச்சியில் காட்டப்பட்டது. பின்புறத்தில் பொருத்தப்பட்ட த்ரஸ்டர்கள் இந்த அதிவேக முடுக்கம் அடைய உதவுகின்றன.இதற்கு முன் இந்தக் காரின் ஆரம்ப விலை சுமார் இரண்டு லட்சம் அமெரிக்க டாலராக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: CM 2031! பதிவெண் கொண்ட டெஸ்லா காரில் திருமாவளவன் பயணம்! கோட் பட விஜய் பாணியில் சூசகம்?
ஆனால் புதிய மாடலுக்கான அதிகாரப்பூர்வ விலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. உற்பத்தி 2028ஆம் ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று வகைகளில் இது வெளியிடப்படும் எனத் தெரிகிறது. அவற்றில் ஒன்று முழுமையான பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
இதையும் படிங்க: சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு... எங்கிருந்து, எங்கெல்லாம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்?