• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செஞ்சி சிறுமி சம்பவத்தில் திடுக் திருப்பம்... நேராக கரும்பு தோட்டத்திற்குள் சென்ற மோப்ப நாய்... நடந்தது என்ன?

    செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான விவகாரத்தில் 5-வது நாளாகத் தீவிர தேடுதல் வேட்டை. கரும்புத் தோட்டத்தில் போலீசார் சோதனை!
    Author By Amaravathi Fri, 16 Oct 2026 09:24:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gingee missing child dog searching

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியைத் தேடும் பணி 5-வது நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு நாட்களாகத் தேடியும் இதுவரை எந்தத் தடயமும் கிடைக்காததால், விசாரணை பல்வேறு கோணங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர் அசைன் அளித்த தகவலின்படி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலமுண்டி கிராமம், குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான வடிவேலு – பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமாவதி மாயமாகியுள்ளார்.

    கடந்த 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள், 12-ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதையும் படிங்க: வாழ்வதா.. நாண்டுகிட்டு சாவதா.?..! நல்லாட்சியா.. நாடக ஆட்சியா.? கொந்தளித்த வேல்முருகன்.!!

    இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியைக் கண்டுபிடிக்க மூன்று டிஎஸ்பிக்கள் தலைமையில், நான்கு காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்டு எட்டு தனிப்படைகளை அமைத்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்தத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த நான்கு நாட்களாக ஆலமுண்டி கிராமத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று குடும்ப விவரங்களைச் சேகரித்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    மேலும், சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தடய அறிவியல் துறை நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினர், சிறுமியின் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடயவியல் ஆய்வு மேற்கொண்டனர். இருப்பினும், இதுவரை குறிப்பிடத்தக்க தடயம் எதுவும் கிடைக்கவில்லை.

    சிறுமியின் வீட்டைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள், முட்புதர்கள், ஏரி, குளங்கள், குட்டைகள், விவசாயக் கிணறுகள் மற்றும் மலைக்குன்றுகளில் உள்ள குகைகள், பாறை இடுக்குகள் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மூலமாகவும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    தீயணைப்புத் துறையினரும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள கிணறுகளில் இறங்கித் தேடினர். மேலும், ஆழமான கிணறுகளில் தேடுவதற்காக மரக்காணத்திலிருந்து மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் சுருக்குமடி வலைகள் கொண்டுவரப்பட்டு, அவற்றின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. செல்போன் கோபுரத் தகவல்களின் அடிப்படையிலும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டது. எனினும், நான்கு நாட்களாக எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், 5-வது நாளான இன்று போலீசார் விசாரணையைப் புதிய கோணத்தில் முன்னெடுத்துள்ளனர். அந்தப் பகுதியில் தற்போது செயல்பாட்டில் உள்ள போக்சோ குற்றவாளிகள் மற்றும் பிற குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்களைத் தனித்தனியாக அழைத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கிடையே, மோப்ப நாய் சிறுமியின் வீட்டிலிருந்து மோப்பம் பிடித்துச் சென்று நின்ற அடர்ந்த கரும்புத் தோட்டத்தில் இன்று காலை முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் கரும்புத் தோட்டத்தில் சிறுமி குறித்த முக்கியத் தடயம் ஏதேனும் கிடைக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்.

    சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஹேமாவதியின் புகைப்படம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    இதனிடையே, சிறுமியைக் கண்டுபிடிக்க உதவும் வகையில், தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் கழகம் சார்பில் உரிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவத்தில் ஐந்தாவது நாளாகத் தேடுதல் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், மோப்ப நாய் நின்ற அடர்ந்த கரும்புத் தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் சோதனையில் முக்கியத் தடயம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: “மூடர் கூடத்தின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும்...” - விடிந்ததுமே விஜய்யை விளாசித் தள்ளிய ஸ்டாலின்...!

    மேலும் படிங்க
    அட பாவிங்களா.!  "கோபுர கலசங்கள் திருட்டு"..! வலைவீசி தேடிவரும் போலீஸ்..!!

    அட பாவிங்களா.! "கோபுர கலசங்கள் திருட்டு"..! வலைவீசி தேடிவரும் போலீஸ்..!!

    தமிழ்நாடு
    பறக்கும் கார்..!  டெஸ்லாவின் அடுத்த பாய்ச்சல்.! ரோஸ்டர் அறிமுகம்..!!

    பறக்கும் கார்..! டெஸ்லாவின் அடுத்த பாய்ச்சல்.! ரோஸ்டர் அறிமுகம்..!!

    உலகம்
    சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு... எங்கிருந்து, எங்கெல்லாம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்?

    சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு... எங்கிருந்து, எங்கெல்லாம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்?

    தமிழ்நாடு
    வாழ்வதா.. நாண்டுகிட்டு சாவதா.?..!  நல்லாட்சியா.. நாடக ஆட்சியா.? கொந்தளித்த வேல்முருகன்.!!

    வாழ்வதா.. நாண்டுகிட்டு சாவதா.?..! நல்லாட்சியா.. நாடக ஆட்சியா.? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    “மூடர் கூடத்தின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும்...” - விடிந்ததுமே விஜய்யை விளாசித் தள்ளிய ஸ்டாலின்...!

    “மூடர் கூடத்தின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும்...” - விடிந்ததுமே விஜய்யை விளாசித் தள்ளிய ஸ்டாலின்...!

    அரசியல்
    அமெரிக்க தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு... 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு...!

    அமெரிக்க தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு... 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு...!

    உலகம்

    செய்திகள்

    அட பாவிங்களா.!

    இன்று 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... குறிப்பா இந்த 6 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப் போகும் கனமழை...!

    இன்று 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... குறிப்பா இந்த 6 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப் போகும் கனமழை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share