தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட நாட்களாக எல்லைப் பிரச்சினை இருந்து வருது. இது கடந்த ஜூலை 24-ம் தேதி திடீர்னு மோதலா வெடிச்சது. எல்லையில் கண்ணிவெடி வெடிச்சதுல தாய்லாந்து ராணுவ வீரர்கள் ஐந்து பேர் படுகாயமடைஞ்சாங்க. இதனால கோபமடைஞ்ச தாய்லாந்து, கம்போடியா மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்துச்சு. கம்போடியாவும் பதிலுக்கு ராக்கெட், பீரங்கி தாக்குதல்களை தொடங்கிடுச்சு.
இந்த சண்டை நான்காவது நாளா ஜூலை 27 அதிகாலை வரை தொடர்ந்தது. அதிர்ஷ்டவசமா, அன்னிக்கு உயிரிழப்பு ஏதும் இல்லை.தாய்லாந்து சொல்லுது, கம்போடியா எல்லைக் கிராமங்களையும் குடியிருப்புகளையும் குறிவெச்சு BM-21 ராக்கெட் தாக்குதல் நடத்துச்சுன்னு. இந்த மோதலுக்கு முக்கிய காரணமே பிரசாத் தா முயன் தோம் கோவில் தான்.
இந்த இந்து-புத்த கோவிலை இரு நாடுகளுமே "இது எங்களுடையது"ன்னு உரிமை கோருது. தாய்லாந்து சொல்றது, கம்போடியா இந்த கோவில் மீது ராக்கெட் வீசி தாக்குதுன்னு. ஆனா, கம்போடியா பதிலுக்கு, "தாய்லாந்து தான் எங்க எல்லைக்குள் நீண்ட தூர பீரங்கிகளை வெச்சு ஏவுகணைகளை வீசுது"ன்னு குற்றம்சாட்டுது.
இதையும் படிங்க: தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்தம்.. அதிபர் ட்ரம்ப் மிரட்டலால் பயம்..

இந்த சூழல்ல, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு, இரு நாட்டு தலைவர்களோட தொலைபேசியில பேசி, "சண்டைய நிறுத்துங்க"ன்னு கேட்டுக்கிட்டார். கம்போடியா, "சரி, நாங்க சண்டைய நிறுத்த தயார்"ன்னு சொல்லிச்சு. ஆனா, தாய்லாந்து ராணுவத்தோட செய்தித் தொடர்பாளர் கர்னல் ரிச்சா சுக்சோவானன்ட் இதைப் பத்தி பேசும்போது, "டிரம்போட மத்தியஸ்த முயற்சி அவரோட தனிப்பட்ட விஷயம். ஆனா, கம்போடியா மனித உரிமைகளையும், மனிதாபிமான சட்டங்களையும் தொடர்ந்து மீறுது.
அவங்க நல்லெண்ணத்துல ரொம்ப பின்னோக்கி இருக்காங்க. அதிகாரப்பூர்வமா பேச்சுவார்த்தைக்கு வரலேன்னா, இந்த சண்டை தொடரும். அமைதியா இருக்க முடியாது"ன்னு கறாரா சொல்லிட்டார். இதுக்கிடையே, மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், "நீங்க ரெண்டு பேரும் வந்து அமைதி பேச்சு நடத்துங்க"ன்னு இரு நாட்டு தலைவர்களையும் அழைச்சார்.
இதை ஏத்துக்கிட்ட தாய்லாந்து பொறுப்பு பிரதமர் பும்தம் வெச்சாயாசாய் மற்றும் கம்போடியா பிரதமர் ஹுன் மானெட், இன்று (ஜூலை 28, 2025) மலேஷியாவுல சந்திக்கப் போறாங்க. இந்த மோதலுக்கு முக்கிய காரணம், பிரசாத் தா முயன் தோம் கோவிலை மையமாக வெச்சு நடக்குற உரிமைப் போட்டி தான்.
இந்த கோவில் கம்போடிய எல்லைக்குள் இருந்தாலும், தாய்லாந்து அதை தன்னுடையதுன்னு சொல்றது பிரச்சினைய தீவிரப்படுத்துது. சர்வதேச நாடுகள் அமைதி காக்க சொல்லி வற்புறுத்தினாலும், இந்த மலேஷிய பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு வெற்றி பெறும்னு பார்க்க வேண்டியிருக்கும். இல்லேன்னா, இந்த சண்டை மேலும் மோசமாக வாய்ப்பு இருக்கு.
இதையும் படிங்க: தாய்லாந்து-கம்போடியா எல்லை பகுதியில் தொடரும் பதற்றம்.. பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு..!!