இந்திய அரசியல் களத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் மற்றும் இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை அகற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியவை திருத்த பணிகளாக மேற்கொள்ளப்படுகிறது.  
தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் முறைகேடுகள் நடைபெறும் இடமும் கூறி எதிர்க்கட்சிகள் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து வருகின்றன. இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தமிழக அரசும் எதிர்த்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் SIR பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் கொடுத்தது.

இதனிடையே, வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குடியுரிமையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சியை தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #SIR...! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்... 21 கட்சிகள் புறக்கணிப்பு...!
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை தான் கேட்கின்றனர் என்று கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்தை மறைமுகமாக கொண்டு வருவது தான் மத்திய அரசு நோக்கம்., என்.ஆர்.சி- யை அமல்படுத்துவதுதான் மத்திய பாஜக அரசின் நோக்கம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டினார். மேலும், தேர்தல் ஆணைய விதிகளை மீறி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். 
இதையும் படிங்க: SIR ஐ பயன்படுத்தி பாஜகவுக்கு எதிரான வாக்குகளை நீக்க முயற்சி... ஓபனாக பேசிய துணை முதல்வர்...!