தெற்கு கரீபியனில் போதைப்பொருள் கடத்தும் கப்பலின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, வெனிசுலா. அந்நாட்டில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ அதிபராக உள்ளார். இவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகச் செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை சப்ளை செய்வதாகவும் கடந்த 2020ம் ஆண்டு அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்வதற்கு வழிவகுத்த தகவல்களுக்கு $50 மில்லியன் (£37 மில்லியன்) வெகுமதி அளிப்பது உட்பட அமெரிக்க இராணுவத் தலையீட்டின் எந்தவொரு முயற்சியையும் வெனிசுலா எதிர்த்துப் போராடும் என்று மதுரோ உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: என்னாது.. டிரம்ப் இறந்துட்டாரா? - திடீரென ட்ரெண்டாகும் "TRUMP IS DEAD" ஹேஷ்டேக் - உண்மை என்ன?
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய போதைப்பொருள் பயங்கரவாதிகள் சர்வதேச நீர்வழியாக அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது அவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக டிரம்ப் கூறினார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில், "இன்று அதகாலையில், எனது உத்தரவின் பேரில், அமெரிக்க இராணுவப் படைகள் தென்னாப்பிரிக்காவின் பொறுப்பில் உள்ள ட்ரென் டி அரகுவா போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிராக இயக்கத் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் எந்த அமெரிக்கப் படைகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வருவது பற்றி யோசிக்கும் எவருக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும். ஜாக்கிரதை!" என பதிவிட்டுள்ளார்.
ஆனால் வெனிசுலாவின் தகவல் தொடர்பு அமைச்சர் ஃப்ரெடி நானெஸ் இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என மறுத்துள்ளார். டிரம்ப் பகிர்ந்துள்ள வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்றும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் என்றும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அமெரிக்க ராணுவம் நடத்திய இந்த தாக்குதல் உலக நாடுகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: உலக அரசியலையே புரட்டிப்போட்ட சம்பவம்... ஜப்பானில் மோடி கால் வைத்த அடுத்த நொடியே ஆட்டம் கண்ட வல்லரசு...!