அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் இந்தியர்களை கடுமையாக பாதிக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பிற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியர்களுக்கு பதிலாக அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமீபத்திய அறிவிப்பு பெரிய நிறுவனங்களில் வேலை தேடுபவர்களின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கோஷத்தை முன்னெடுத்துள்ளார். அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் சீனாவில் தங்களது தொழிற்சாலைகளை கட்டி எழுப்பி இந்தியர்களை பணியில் அமர்த்தி வெளிநாட்டில் லாபத்தை குவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இனி அமெரிக்கர்களுக்கே அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதற்கான சீர்திருத்தங்களையும் நேரடி அழுத்தங்களையும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவரது தலைமையிலான நிர்வாகம் கொடுக்கும் என்றும் தெரிகிறது.
வாஷிங்டனில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவர் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து விவகாரங்களிலும் அமெரிக்காவையே முதன்மையாக வைத்து செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் இனி கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் இனி எதிர்காலத்தில் இந்தியர்கள் பணி அமர்த்தப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இனி கோகோ கோலாவில் ஒரிஜினல் சர்க்கரை.. 'NO ARTIFICIAL'.. அதிபர் டிரம்ப் அசத்தல் அறிவிப்பு..!
“அமெரிக்காவில் உள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் நிறுவனங்களை உருவாக்கி இந்திய ஊழியர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. இங்குள்ள மக்களின் வாய்ப்புகளைப் புறக்கணிப்பது அல்லது பறிப்பது நல்லதல்ல. எனது நிர்வாகத்தின் கீழ் இது பொறுத்துக்கொள்ளப்படாது” எனக்கூறியுள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனங்களின் உலகளாவிய மனநிலையை டிரம்ப் விமர்சித்தார். பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்ற நாடுகளில் அதிக அளவில் முதலீடு செய்து, அமெரிக்காவின் சுதந்திரத்தைத் தடுத்து நிறுத்துவதாக கடுமையாக சாடியுள்ளார். இந்த நிறுவனங்கள் தங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று பல அமெரிக்கர்கள் குற்றச்சாட்டி வரும் நிலையில், டிரம்பின் இந்த நேரடி எச்சரிக்கை தகவல் தொழில்நுட்ப உலகில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: காப்பருக்கு 50%, மருந்து பொருட்களுக்கு 200%.. புதிய வரி விதியை கையிலெடுத்த டிரம்ப்..!