கோவையில் நடந்த திமுக கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. “திமுக ஈடிக்கும் பயப்படாது; மோடிக்கும் பயப்படாது; மோடி இல்ல... அவரோட அப்பாவே வந்தாலும் பயப்படாது” என்று உதயநிதி பேசியது, பாஜகவினரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் மறைந்த தந்தையை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டி பாஜகவினர் உதயநிதியை விளாசி வருகின்றனர்.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் Shehzad Poonawalla தனது வீடியோவில் உதயநிதியை கடுமையாக தாக்கியுள்ளார். “இது ஒழுக்கமில்லாத, அறிவில்லாத பேச்சு” என்று சாடிய அவர், “டெல்லியில் நடந்த AI உச்சி மாநாட்டில் ஒழுக்கமே இல்லாமல் ஆடையின்றி காங்கிரஸார் நடத்தியது போராட்டம் அல்ல; இடையூறு. இப்போது அதன் கூட்டணி கட்சியான திமுகவும் முறையற்ற கட்சியாக மாறிவிட்டது” என்றார்.
மேலும், உதயநிதி ஏற்கனவே இந்துக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் என்றும், இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தவர் என்றும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: எனக்கு கடன் தந்தது என் மகனா? எனக்கே தெரியாதே?! அண்ணாமலை விசாரணையில் உளறிய பாலு! பகீர்!!
VIDEO | Delhi: On Tamil Nadu Deputy CM Udhayanidhi Stalin's remarks on PM Narendra Modi's father, BJP leader Shehzad Poonawalla says, "Congress went shirtless, topless, and characterless with the way it protested at the AI Summit. It was not protest, it was disruption. Now DMK,… pic.twitter.com/21nnMXLo5J
— Press Trust of India (@PTI_News) February 23, 2026
“இப்போது மோடியின் மறைந்த தந்தையை பற்றி பேசியுள்ளார். பீகார் தேர்தலின்போது மோடியின் தாயாரை இண்டி கூட்டணி கட்சியினர் குறிவைத்தனர். தொடர்ந்து மோடியின் அம்மா, அப்பாவை கெட்ட வார்த்தைகளால் வசைபாடுகின்றனர். காரணம் அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்” என்று தெரிவித்தார்.
Shehzad மேலும், “மோடியின் குடும்ப பின்னணியை சொல்லி காயப்படுத்துகின்றனர். அவரை டீக்கடைக்காரர் என்று ஏளனம் செய்கின்றனர். கொன்று விடுவோம் என்றெல்லாம் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இப்போது மோடியின் தந்தையை இழிவு செய்துள்ளார் உதயநிதி” என்று கடுமையாக சாடினார்.
இந்த விமர்சனம் திமுக - பாஜக இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதியின் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒரு தரப்பு “அரசியல் விமர்சனம்” என ஆதரிக்க, மற்றொரு தரப்பு “குடும்ப உறுப்பினர்களை இழிவுபடுத்துவது தவறு” என விமர்சிக்கிறது.
திமுக தரப்பிலிருந்து இதுவரை பதில் வரவில்லை. ஆனால் பாஜகவினர் இந்த விவகாரத்தை தேர்தல் ஆயுதமாக்க திட்டமிட்டுள்ளனர். 2026 தேர்தல் நெருங்கும் நிலையில் இத்தகைய விமர்சனங்கள் அரசியல் களத்தை சூடுபிடிக்க வைக்கும்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கக்கூடாது! திமுக மாஸ்டர் ப்ளான்! நாகேந்திரன், வானதியை தோற்கடிக்க ஸ்டாலின் செக்!