மருத்துவத் தொழில் என்பது மனித உயிரைப் போற்றும் புனிதமான பணி. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மருத்துவர்கள் உலகெங்கும் தங்களது உயிரையே பணயம் வைத்து நோயாளிகளின் உயிரைக் காக்கின்றனர். இரவு பகல் பாராது அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உழைப்பவர்கள், கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இன்றி சேவை செய்பவர்கள், தொற்று நோய்கள் பரவிய காலங்களில் முகக்கவசத்துடன் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றியவர்கள். இவர்களது அர்ப்பணிப்பு சொல்லில் அடங்காதது. ஒரு மருத்துவர் ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றும்போது அது ஒரு குடும்பத்தையே காப்பாற்றுவதற்குச் சமம். இத்தகைய மாபெரும் பணியைச் செய்யும் தொழிலுக்கு மரியாதையும் நன்றியும் செலுத்த வேண்டியது மனித சமூகத்தின் கடமை.ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்தப் புனிதத் தொழிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது ஒரு சிறு தொகையினரே.
அலட்சியம், பண ஆசை, அறிவுச் சோர்வு, பொறுப்பின்மை., இவை சில மருத்துவர்களிடம் தலைவிரித்தாடுகின்றன. தேவையற்ற பரிசோதனைகள், அதிக மருந்துகள், தவறான மருந்தளவு, அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் தவறுகள், நோயாளியின் வரலாற்றை முழுமையாகக் கேட்காமல் அவசர அவசரமாக முடிவெடுத்தல் இவையெல்லாம் ஒரு நோயாளியின் உயிரையே பறிக்கக் கூடியவை. சில சமயம் ஒரு சிறு அலட்சியம் கூட பெரும் பேரழிவை ஏற்படுத்தி விடுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட்டில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இரண்டரை வயது குழந்தையின் காயத்துக்கு ஃபெவி குயிக் போடப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. காயத்துக்கு சிகிச்சை எடுக்க வந்த குழந்தைக்கு மருத்துவர்கள் காயத்திற்கு ஃபெவிக்விக் பசையைப் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டு!! செப்புத்தகடு என மாற்றி எழுதிய மாஜி அதிகாரி! விசாரணையில் வெளியான பகீர்!
இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி விளக்கம் அளித்தார். தற்போது குழந்தையின் காயம் சுத்தம் செய்யப்பட்டு 4 தையல்கள் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பலே ஐடியா!! உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த ட்ரம்ப் யோசனை! 28 அம்ச திட்டம் அறிவிப்பு!