அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப், வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் பரஸ்பர வரித்திட்டத்தை கொண்டு வந்தார். இந்தியா மீது அதிகவரிவிதிப்பு தொடர்பாக தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வந்தார். உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் நாடு இந்தியா என்று அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.
அமெரிக்கப்ப பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரியை விதிக்கும் பரஸ்பரவரிவிதிப்பை அதிபர் ட்ரம்ப் கடந்த 3ம் தேதி அறிமுகம் செய்தார். இதன்படி இந்தியா மீது 56 சதவீதம் வரிவிதித்து, அதை பின்னர் 26 சதவீதமாகக் குறைத்து அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்தியா தவிர்த்து, வியட்நாம் மீது 46 சதவீத வரி, தைவானுக்கு 32%, தென் கொரியா மீது 25%, ஜப்பான் மீது 24%, ஐரோப்பிய யூனியன் மீது 20% வரிவிதித்து அந்த வரிவிதிப்பை அமெரிக்கா அமல்படுத்தியுள்ளது. சீனா மீது 34 சதவீதம் வரிவிதித்தது அமெரிக்கா, இதற்கு பதிலடியாக சீனாவும் 34 சதவீதம் அமெரிக்கா மீது வரிவிதித்தது.
இதையும் படிங்க: சீனாவின் யுவான் கரன்சி மதிப்பு பாதாளத்தில் சரிவு: அமெரிக்காவுக்கு 84% வரி விதித்த சீனா..!

இதையடுத்து கூடுதலாக 54 சதவீதம் என மொத்தம் 104 சதவீத வரியை சீனா மீது அமெரிக்கா விதித்துள்ளது. இந்நிலையில் இந்தியா மீது விதிக்கப்பட்டபரஸ்பர வரி குறித்து அதிபர் ட்ரம்ப் கூறுகையில் “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எனக்கு சிறந்த நண்பர். ஆனால் இந்திய அரசு எங்களை நடத்துவது சரியல்ல என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன்.

இந்தியா எங்கள் மீது 52 சதவீதம் வரிவிதிக்கிறது, ஆதலால், இந்தியா மீது நாங்கள் பாதியாக 26 சதவீதம் வரிவிதிக்கிறோம்” எனத் தெரிவித்தார். இந்தியா மீதான பரஸ்பர வரிவிதிப்பான 26% புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அமெரிக்கா விதித்த வரிவிதிப்பை இந்தியா மிகுந்த உன்னிப்பாக கவனித்து வருகிறது, இதில் இருக்கும் வாய்ப்புகள், அமெரிக்க வர்த்தகத்தை சிறப்பாக கொண்டு செல்லும் வழிகளை இந்தியா ஆய்வு செய்து வருகிறது.
இதையும் படிங்க: சீனா மீது 104% வரி விதித்தது அமெரிக்கா: இந்தியாவிடம் ஆதரவுகோரும் சீனா..!