மலிவான வெளிநாட்டு விவசாயப் பொருட்கள் உள்நாட்டு விவசாயிகளைப் பாதிக்கின்றன என்ற அமெரிக்க விவசாயிகளின் புகார்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றொரு முக்கிய முடிவை எடுக்க உள்ளார். இந்திய அரிசி மற்றும் உரங்கள் உட்பட பல விவசாய இறக்குமதிகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க விவசாயிகளுக்கு ஏற்கனவே 12 பில்லியன் டாலர் நிதி உதவித் தொகுப்பை அறிவித்துள்ள டிரம்ப், வெள்ளை மாளிகை கூட்டத்தில் வரிகள் குறித்து மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அமெரிக்க விவசாயத் துறையைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை இன்னும் கடுமையாகக் கையாள்வதாக கூறியுள்ளார்.
இந்தியா தனது அரிசியை அமெரிக்க சந்தையில் கொட்டுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மீது மேலும் சில கடுமையான வரிகளை விதிக்க உள்ளதாக மறைமுகமாக எச்சரித்துள்ளார். இந்தியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படுவதால் அமெரிக்க அரிசி விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். மலிவான வெளிநாட்டு அரிசி சந்தையில் நுழைவதால், உள்நாட்டு விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க முடியாமல் சேமிப்பு கிடக்குகளில் கொட்டி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர்.
விவசாயப் பொருட்களின் உற்பத்தித்திறனுக்கு மிக முக்கியமான உரங்கள் குறித்தும் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான உரங்கள் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதைக் குறிப்பிட்ட அவர், அந்த இறக்குமதிகளுக்கு அதிக வரிகள் விதிக்கப்படலாம் என்று பரிந்துரைத்தார். நமது உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிக்க இது அவசியமாக இருக்கலாம். அதை நாம் இங்கேயே உற்பத்தி செய்யலாம் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க விவசாயத் துறையில் உற்பத்தித்திறனை வலுப்படுத்துவதும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதுமே டிரம்பின் இந்த முடிவுக்கு காரணம் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் மக்கள் சந்திப்புக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்... போலீஸ் தீவிர விசாரணை.. பரபரப்பு...!
அமெரிக்க பொருளாதாரம் தற்போது பணவீக்க அழுத்தங்களையும் அதிகரித்து வரும் நுகர்வோர் விலைகளையும் எதிர்கொள்கிறது. விவசாயிகள் அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள், அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவை டிரம்ப் நிர்வாகத்தின் வரி அடிப்படையிலான வர்த்தகக் கொள்கைகளின் விளைவாகும் என்று நம்பப்படுகிறது. அதே நேரத்தில், அமெரிக்கா-இந்தியா மற்றும் அமெரிக்கா-கனடா வர்த்தக உறவுகளும் பதட்டங்களை எதிர்கொள்கின்றன.

இதையும் படிங்க: எல்லாம் நல்லபடியா நடக்கணும் முருகா... விஜய்- காக மொட்டை போட்ட பெண்...!