திமுக - விசிக கூட்டணி தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக மிக முக்கியமான ஒரு அங்கமாக இருந்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது தலித் மக்களின் உரிமைகளுக்காகவும், சாதி ஒழிப்பு, சமூக நீதி, தமிழ் தேசிய உணர்வு போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி செயல்படும் கட்சி. இதன் தலைவரான திருமாவளவன் தமிழக அரசியலில் தனித்துவமான குரலாக விளங்குபவர்.
இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து பயணிக்கத் தொடங்கியது 2000களின் பிற்பகுதியில் இருந்தே தொடங்கியது என்றாலும், தொடர்ச்சியான மற்றும் வலுவான கூட்டணியாக மாறியது 2016 மற்றும் அதற்குப் பிறகு தான். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக சில தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அப்போது விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் 4 இடங்களில் வெற்றி பெற்றது விசிக. இது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. திருமாவளவன் தானே சிதம்பரம் தொகுதியில் இருந்து எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவரது கட்சி சட்டமன்றத்தில் வலுவான குரலாக ஒலித்தது. திருமாவளவன் பலமுறை திமுகவின் கொள்கைகளை ஆதரித்து பேசியிருக்கிறார். அதேநேரம், விசிக தனது தனித்துவமான அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டு, தலித் மக்களின் பிரச்சினைகளை கூட்டணிக்குள் வலுவாக எழுப்பி வருகிறது.
இதையும் படிங்க: "உச்சந்தலையில் பேரிடி..கூட்டணி உடையும்"... தேமுதிக இணைவு குறித்து திருமா கொடுத்த ரியாக்ஷன்...!
தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் உறுதியாகத் தொடருகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, மநீம, தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் விசிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகளை விசிக கோரி வருகிறது. சில தகவல்களின்படி, விசிக 10 முதல் 12 தொகுதிகள் வரை கேட்க உள்ளதாக தெரிகிறது. இரட்டை இலக்கத்தில் சீட் கேட்க திருமாவளவன் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தரப்பில் 8 தொகுதிகள் வரை வழங்குவதற்கு தயாராக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இன்று திமுக பேச்சுவார்த்தை குழுவினர் விசிக நிர்வாகிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தேமுதிக... அரசியல் எதிரிகளின் அடிவயிறு எரியும்..!! - திருமா. தாக்கு..!!