வட உள் தமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி – மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மயிலாடுதுறை, தஞ்சை, ராமநாதபுரம், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடை எடுத்தாச்சு... 7 மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது... உஷார் மக்களே...!
மேலும் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 32°C வரை இருக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 2 வாரம் ரெஸ்ட்... அப்புறம்தான் ஆட்டமே இருக்கு...! வானிலை மையம் எச்சரிக்கை..!