அமெரிக்க அரசியலில் இப்போ எல்லோர் மனசிலும் ஒரு பெரிய கேள்வி ஓடுது – அடுத்த அமெரிக்க அதிபர் யாரு? 2025 ஜனவரில இரண்டாவது முறையா அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ஒரு தனியார் செய்தி சேனலுக்கு நேற்று கொடுத்த பேட்டியில் இந்த கேள்விக்கு ஒரு முக்கியமான ஹிண்ட் கொடுத்திருக்காரு.
அமெரிக்க அரசியலமைப்பின் 22-வது சட்டத்திருத்தப்படி, ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறைதான் அதிபராக இருக்க முடியும். ஒருவரின் மறைவு அல்லது பதவி விலகலால் குறுகிய காலம் அதிபராக இருந்தாலும், அவரால மறுபடி ஒரு முறை மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். ட்ரம்ப் ஏற்கனவே 2017-2021, இப்போ 2025-ல இருந்து இரண்டாவது முறையா அதிபராக இருக்காரு. அதனால, 2028-ல அவரால மூணாவது முறையா நிக்க முடியாது. இந்த சூழல்ல, நேற்று ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்தப்போ, ட்ரம்ப் தன்னோட அடுத்த வாரிசு பத்தி பேசியிருக்காரு.
அந்த பேட்டியில ட்ரம்ப் என்ன சொன்னாரு? “நான் மூணாவது முறையா தேர்தலில் நிக்க ஆசைப்படுறேன், ஆனா அரசியலமைப்பு விதிகள்படி அது முடியாது. அதனால, நம்ம துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் குடியரசு கட்சியோட வேட்பாளரா வரலாம்.
இதையும் படிங்க: இறந்த பொருளாதாரத்தில் இது எப்படி சாத்தியம்..! மும்மடங்கு வளர்ச்சி!! மூக்கறுப்பட்ட ட்ரம்ப்..
அவர் இப்போ துணை அதிபரா இருக்குறதால, அவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்படுறது நியாயமா இருக்கும். அவர் சூப்பரா வேலை செய்யுறாரு, ஆனா இந்த முடிவுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு,”னு சொல்லியிருக்காரு. இது 2028 அதிபர் தேர்தலுக்கு ஒரு பெரிய சமிக்ஞையை கொடுத்திருக்கு.

இப்போ ஜே.டி. வான்ஸ் யாருனு பார்க்கலாம். 40 வயசு ஆகுற வான்ஸ், ஓஹியோ மாநிலத்தை சேர்ந்த செனட்டர். 2016-ல அவரு எழுதின ‘ஹில்பில்லி எலெஜி’ புத்தகம் அவரை அமெரிக்காவுல பிரபலமாக்குச்சு. அந்த புத்தகத்துல, அமெரிக்காவின் தொழிலாளி வர்க்கத்தோட வாழ்க்கை சவால்களைப் பத்தி பேசியிருந்தாரு. ஆரம்பத்துல ட்ரம்பை கடுமையா விமர்சிசவர் வான்ஸ்.
2016-ல ட்ரம்பை “அமெரிக்காவோட ஹிட்லர்”னு கூட சொல்லியிருக்காரு! ஆனா, பிறகு 2022 செனட் தேர்தலில் ட்ரம்போட ஆதரவோட நின்னு வெற்றி பெறுறார். இப்போ ட்ரம்போட விசுவாசமான ஆதரவாளரா மாறி, 2024-ல துணை அதிபர் வேட்பாளரா நின்னு, இப்போ துணை அதிபரா இருக்காரு.
வான்ஸ் இப்போ ட்ரம்போட “மேக் அமெரிக்கா கிரேட் அகைன்” (MAGA) இயக்கத்தோட முக்கிய பிரமுகரா பார்க்கப்படுறாரு. ட்ரம்போட மகன் டொனால்டு ட்ரம்ப் ஜூனியர், சிலிக்கான் வேலியை சேர்ந்த பில்லியனர் பீட்டர் தீல் மாதிரியான ஆளுங்க வான்ஸுக்கு ஆதரவு தர்றாங்க.
ஆனா, 2028 தேர்தல் இன்னும் மூணு வருஷம் இருக்குறதால, குடியரசு கட்சியில வேற வேட்பாளர்கள் வரலாம்னும் சொல்றாங்க. இருந்தாலும், ட்ரம்போட ஆசி வான்ஸுக்கு இருக்குனு இந்த பேட்டி காட்டுது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்க அதிபர் தேர்தல் எப்பவும் முக்கியமா பார்க்கப்படுது. ஏன்னா, அமெரிக்காவோட வெளியுறவு கொள்கைகள் இந்தியாவையும் பாதிக்கும். வான்ஸ் அதிபரானா, ட்ரம்போட பாணியிலேயே நிறைய கொள்கைகள் தொடரலாம். ஆனா, இப்பவே எதையும் உறுதியா சொல்ல முடியாது. 2028 வரை இந்த அரசியல் டிராமா எப்படி போகுதுனு பொறுத்திருந்து பார்ப்போம்!
இதையும் படிங்க: சீனாவுக்கு போகாதீங்க!! 7 ஆயிரம் பேருக்கு காய்ச்சல்.. அமெரிக்கா வார்னிங்..!