அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஸ்காட்லாந்தில் உள்ள தன்னோட டர்ன்பெர்ரி கோல்ஃப் ரிசார்ட்டுக்கு சமீபத்துல ஒரு தனிப்பட்ட பயணமா போயிருந்தார். அங்கு, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், தன்னோட மனைவி விக்டோரியாவோடு வந்து டிரம்பை சந்திச்சார்.
இந்த சந்திப்பு ஜூலை 28, 2025-ல் நடந்தது. இந்த சந்திப்புல, காஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் காரணமா ஏற்பட்டிருக்க உணவு தட்டுப்பாடு பிரச்சனையைப் பத்தி பேசினாங்க. ஸ்டார்மர், “காஸாவில் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, அமெரிக்கா இதுல பெரிய பங்கு வகிக்கணும்”னு டிரம்பை கேட்டுக்கிட்டார். இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுத்து, காஸாவுக்கு அதிக உதவிகள் போய்ச் சேரணும்னு வலியுறுத்தினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு, இரண்டு பேரும் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தாங்க. அப்போ டிரம்ப், “நான் இல்லேன்னா, உலகத்துல ஆறு பெரிய போர்கள் நடந்திருக்கும். அதுல ஒண்ணு இந்தியா-பாகிஸ்தான் போர்”னு பெருமையா சொன்னார். “இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களோடு சண்டையிட தயாரா இருந்தாங்க. நான் தலையிட்டு, ‘சண்டைய நிறுத்தலேன்னா, உங்களுக்கு டிரேட் டீல் கிடையாது’னு சொன்னேன். அதனாலதான் அவங்க சண்டைய நிறுத்தினாங்க”னு கூறினார்.
இதையும் படிங்க: ட்ரம்ப் சொன்னது அத்தனையும் பொய்.. இந்தியா - பாக்., சண்டையில நடந்ததே வேற..!

இந்த பேச்சு, இந்தியாவுல பாராளுமன்றத்துல ஆபரேஷன் சிந்தூர் பற்றி நடந்த விவாதத்தோடு ஒத்துப்போகுது. ஆனா, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “டிரம்ப் மோடியோடு இந்த விஷயத்துல பேசவே இல்லை. போர் நிறுத்தத்துக்கு அமெரிக்க மத்தியஸ்தம் இல்லை”னு லோக்சபாவில் தெளிவா சொல்லியிருக்கார்.
டிரம்போட இந்த கூற்று, இந்தியாவுல பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கு. எதிர்க்கட்சிகள், “டிரம்ப் பொய் சொல்றாரா, இல்ல அரசு மறைக்குதா?”னு கேள்வி எழுப்பி, மோடி அரசை விமர்சனம் செய்ய ஆரம்பிச்சாங்க. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், “இந்தியாவோட வெளியுறவு கொள்கையில் இவ்வளவு பெரிய விஷயத்தை மறைக்குறது ஏத்துக்க முடியாது”னு குற்றம்சாட்டியிருக்கார்.
ஆனா, அரசு தரப்பில், “இந்தியா-பாகிஸ்தான் மோதல் ஒரு இருதரப்பு விவகாரம். இதுல மூணாவது நாடு தலையிட வேண்டிய அவசியமில்லை”னு உறுதியா சொல்லியிருக்கு.காஸா விவகாரத்துல, டிரம்ப், “நான் காஸாவில் பசியால் வாடுற குழந்தைகளை டிவியில பார்த்தேன். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இதை சரி செய்யணும். உணவும் பாதுகாப்பும் உடனே கிடைக்கணும்”னு கூறினார்.

ஸ்டார்மர், “பிரிட்டன் மக்கள் காஸாவில் நடக்குற அவலங்களை பார்த்து அதிர்ச்சியில இருக்காங்க. இதுக்கு உடனே தீர்வு காணணும்”னு வலியுறுத்தினார். இருவரும், ஜோர்டானோடு இணைந்து காஸாவுக்கு விமானம் மூலமா உதவி பொருட்கள் அனுப்புவது பற்றி பேசினாங்க. ஆனா, டிரம்ப், “நாங்க இதுவரை 60 மில்லியன் டாலர் உதவி கொடுத்திருக்கோம், ஆனா யாரும் நன்றி சொல்லல”னு புலம்பினார்.
இந்த சந்திப்பு, இந்தியா-பாகிஸ்தான் மோதல், காஸா நெருக்கடி, அமெரிக்க-பிரிட்டன் வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல விஷயங்களை மையப்படுத்தி நடந்தது. டிரம்போட இந்தியா-பாகிஸ்தான் கூற்று, இந்தியாவுல சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் இதுக்கு பதில் சொல்லுவாங்கனு எதிர்பார்க்கப்படுது.
இதையும் படிங்க: பேனா உடைஞ்சதா? பென்சில் உடைஞ்சதானு கேக்காதீங்க!! எக்சாம் ரிசல்ட் என்னானு பாருங்க!! ராஜ்நாத் சிங் நச்!!