யூடியூப்மூலமா வருவாய் ஈட்டுவோருக்கு புதுசா சிக்கல் எழுந்திருக்கா?. யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராம்னு சொல்லுவாங்க. அதாவது YouTubeல கண்டென்ட் அப்லோட் பண்ணி அதுல வர ஆட்ஸ் மூலமா நீங்க பணம் சம்பாதிக்கிறீங்க அப்படின்னா இந்த யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராம்ல நீங்க இருப்பீங்க. இதுல புதுசா ஜூலை 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் வரப்படவுள்ளது.
அதாவது எந்தெந்த வீடியோக்களுக்கு இப்ப வருவாய் இருக்காது என்ற பட்டியலை யூ-டியூப் வெளியிட்டுள்ளது. ரொம்ப லோ குவாலிட்டி அதாவது குவாலிட்டினா பிக்ஸ்லேட் ஆகுறது அந்த மாதிரி கிடையாது. கண்டென்ட் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்து, மிக குறைந்த தரமா அது இருக்கு அப்படின்னா, அதுக்கு வருவாய் தரப்பட மாட்டாது. அதே மாதிரி மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் வீடியோக்கள். இப்ப ஒருத்தவங்க ஒரு கண்டென்ட்ட போஸ்ட் பண்ணி இருக்காங்க. அதை எடுத்து அதுல ஒரு சின்ன ஆல்டரேஷன் பண்ணி திரும்ப திரும்ப அப்லோட் பண்ணி அது மூலமா சம்பாதிப்பாங்க. அந்த மாதிரியான கண்டென்ட்டுக்கு இனிமே வருவாய் இருக்காது.
அதேபோல பிறர் பயன்படுத்திய வீடியோக்கள் ஒரு கம்பைலேஷன் மாதிரி யூஸ் பண்ணுவாங்க. நிறைய பேரோட வீடியோஸை எடுத்து அதை மொத்தமா அப்லோட் பண்ணி அது மூலமா சம்பாதிப்பாங்க. இதுக்கெல்லாம் இப்போ சிக்கல் வரும் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு. இதன் பிரதான நோக்கம் என்ன என்று பார்த்தால், ஒரிஜினல் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே ஆகும்.
அதாவது கிரியேட்டர்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்களுடைய திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இதை செய்வதாக யூடியூப் தெரிவித்துள்ளது. கற்பனை திறனோடு உருவாக்கப்படும் வீடியோக்களுக்கு நிச்சயமா வருவாய் இருக்கும் அப்படின்னு சொல்லிருக்காங்க. அது மட்டும் கிடையாது. விளம்பரதாரர்களோட நம்பிக்கையை பெறக்கூடிய வகையில இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் யூ-டியூப் தரப்பில் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: 2 முறையும் ஆஜராகவில்லை.. முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார் மதுரை ஆதீனம்..!
முழுக்க முழுக்க ஏஐ-யை மட்டும் பயன்படுத்தி எடுக்கக்கூடிய வீடியோக்களுக்கு சிக்கல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏஐ அவதார்களைக் கொண்டு காமிக்ஸ் மற்றும் வீடியோ கேம் வ்வீடியோக்களை தயாரித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்த சேனல்களுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: நான் அப்படி சொல்லல.. கண்ணு காது வெச்சு பேசுறாங்க.. எடப்பாடி விளக்கம்..!