மும்பையில் கடந்த நாலு நாளா தொடர்ந்து பெய்ஞ்சு வர்ற கனமழை, மக்களோட இயல்பு வாழ்க்கையை மொத்தமா முடக்கி, 21 பேரோட உயிரை காவு வாங்கியிருக்கு! இன்று (ஆகஸ்ட் 20, 2025) மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டிருக்கு, ஆனா மழை இன்னும் விடாம தொடருது.
மும்பை மட்டுமில்ல, தானே, பால்கர், ராய்கட், ரத்னகிரி உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளக்காடா மாறி, இடுப்பளவு தண்ணீர் தேங்கி மக்கள் தவிச்சு போயிருக்காங்க. ரயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, மும்பை முழுக்க போக்குவரத்து ஸ்தம்பிச்சு நிக்குது.
கடந்த ஆகஸ்ட் 15-ல இருந்து 19 வரை, நாலு நாள்ல மும்பையை மழை அடிச்சு துவம்சம் பண்ணிருக்கு. இந்த மழைக்கு மொத்தம் 21 பேர் உயிரிழந்திருக்காங்க. விக்ரோலி பகுதியில ஒரு நிலச்சரிவுல ரெண்டு பேர் இறந்ததும், பந்துப் பகுதியில ஒரு மனுஷன் மின்சாரம் தாக்கி இறந்ததும் இதுல அடக்கம். மும்பையோட பல பகுதிகள்ல 300 மில்லிமீட்டருக்கு மேல மழை பெய்ஞ்சிருக்கு.
இதையும் படிங்க: கனமழைக்கு இடையே அந்தரத்தில் நின்ற ரயில்.. ஜன்னலை உடைத்து மீட்கப்பட்ட பயணிகள்..
கடந்த 24 மணி நேரத்துல விக்ரோலி 223.5 மி.மீ, சாந்தாக்ரூஸ் 206.6 மி.மீ, பைகுலா 184 மி.மீ, ஜூஹூ 148.5 மி.மீ, பாந்தரா 132.5 மி.மீ, கொலாபா 100.2 மி.மீனு மழை பதிவாகியிருக்கு. இந்த மழையால, கிட்டத்தட்ட 12 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்துல மூழ்கி சேதமாகியிருக்கு.

மும்பையோட தாழ்வான பகுதிகள்ல தண்ணீர் தேங்கி, கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூழ்கி சேதமாகியிருக்கு. மிதி ஆறு 3.9 மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் பாய்ஞ்சதால, குர்லாவுல உள்ள கிராந்தி நகர் பகுதியில இருந்து 350 பேர் பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டிருக்காங்க.
பிரஹன்மும்பை மாநகராட்சி (BMC) பம்புகளை வச்சு தண்ணீரை வெளியேத்த முயற்சி பண்ணாலும், மழை விடாம பெய்யுறதால தண்ணீர் மட்டம் குறையல. இதனால, பஸ், ரயில் சேவைகள் கடுமையா பாதிக்கப்பட்டு, 135 பஸ் ரூட்டுகள் மாற்றப்பட்டு, 11 விமானங்கள் வேற இடத்துக்கு திருப்பி விடப்பட்டிருக்கு.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்திருக்கு, ஆனா நாளை (ஆகஸ்ட் 21) முதல் மழை தீவிரம் குறையும்னு சொல்றாங்க. ராய்கட், புனேவோட காட் பகுதிகளுக்கு இன்னைக்கு ரெட் அலர்ட் தொடருது. மும்பையோட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்னைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கு.
மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், மக்கள் அவசியமில்லாம வெளியே வர வேண்டாம்னு எச்சரிச்சிருக்காரு. மும்பை மாநகராட்சியும், காவல்துறையும் வார்ரூம்ல இருந்து நிலைமையை கண்காணிச்சு, மக்களுக்கு உதவி செய்ய தயாரா இருக்காங்க.
இந்த மழையால, மும்பையோட பொருளாதாரமும், மக்களோட அன்றாட வாழ்க்கையும் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கு. சாலைகள்ல தண்ணீர் தேங்கி, போக்குவரத்து முடங்கி, மக்கள் வீட்டுக்குள்ளயே முடங்கியிருக்காங்க. இந்த மழை இன்னும் எத்தனை நாளைக்கு மும்பையை பாடாய் படுத்தும்னு தெரியல!
இதையும் படிங்க: அடுத்த 48 மணி நேரம் ரொம்ப முக்கியம்!! கனமழையால் தவிக்கும் மும்பை.. முதல்வர் பட்னாவிஸ் அட்வைஸ்!!