மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்துகளில் 2,171 இடங்களில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களில் 1608 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
2018ம் ஆண்டு நடந்தது என்ன: 2018ம் ஆண்டிலும் இதே நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தன. ஆனால் இந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்தது. 2018ம் ஆண்டில் 75 நகராட்சிகளில் 46 முஸ்லிம் வேட்பாளர்கள்தான் பாஜக சார்பில் வென்றனர். இந்த முறை பாஜக சார்பில் 103 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டு 82 பேர் வெற்றி பெற்றனர். கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில் பதான், கேதா, பஞ்சமால், ஜுனாகாந்த் ஆகிய மாவட்டங்களி்ல் கடந்த தேர்தலில் பாஜக சார்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளர்கள்கூட போட்டியிடவில்லை, இந்த முறை இங்கு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டு வென்றுள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டில் பாஜகவின் முஸ்லிம் வேட்பாளர்கள் 18 சதவீதம் இருந்த நிலையில் இந்தமுறை 28 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் முஸ்லிம் வேட்பாளர்கள் சதவீதம் தொடர்ந்து 39% ஆகவும், ஆம் ஆத்மி கட்சி 4.7% ஆகவும் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் 13 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர், இதில் ஜாம்நகரில் சலயா பகுதியில் 11 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கேத் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் 9 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது, ரதான்பூர் மாவட்டத்தில் பதான் பகுதியில் 5 முஸ்லிம் வேட்பாளர்கள், வந்தாலி மாவட்டத்தில் உள்ள ஜூனாகாத் நகராட்சியில் 6 முஸ்லிம் வேட்பாளர்கள், பஞ்சமால் மாவட்டத்தில் 2 நகராட்சிகளில் 5 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: பர்வேஷ்க்கு பதில் ரேகா குப்தா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?? வெளி வராத தகவல்கள்..!

கடந்த 2018ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் 2064 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 632 இடங்களில் வென்றது, இந்த முறை 252 இடங்களாகக் குறைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்கள் கடந்த 2018ல் 133 ஆக இருந்தநிலையில் இந்தமுறை 109 ஆகக் குறைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரே முஸ்லிம எம்எல்ஏவான இம்ரான் கேதாவாலா கூறுகையில் “ இந்த முறை நகராட்சி தேர்தலில் பெரும்பாலான முஸ்லிம் வேட்பாளர்கள் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடாமல் சுயேட்சையாகப் போட்டியிட்டனர்” எனத் தெரிவித்தார்.

பாஜக திட்டம் என்ன: உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் 82 பேர் பாஜக சார்பில் வெற்றி பெற்றுள்ளநிலையில் அடுத்து நடக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது. குஜராத்தில் பாஜக சார்பில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த எந்த வேட்பாளரும் பாஜக சார்பில் போட்டியிட்டதில்லை என்ற வழக்கத்தையும் மாற்றி, சிறுபான்மையினரை அவர்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் வேட்பாளர்களாக நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது. குஜராத் பாஜகவின் ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் யாக்னேஷ் தவே கூறுகையில் “ சிறுபான்மை மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளது இந்த தேர்தல் வெற்றியில் தெரிந்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து சட்டப்பேரவைத் தேர்திலில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அவர்களின் சார்பில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தலாம். 210 தொகுதிகளில் பாஜக சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் 20 வேட்பாளர்கள் போட்டியின்றி வெல்வார்கள்” எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் எல்.முருகன் தடுத்துநிறுத்தப்பட்ட விவகாரம்.. தமிழக டிஜிபிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்..