பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை 2016-ஆம் ஆண்டு அமல்படுத்திய பிறகு, அடுத்தடுத்த ஊதிய மாற்றங்களுக்கான எதிர்பார்ப்புகள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வந்தன. இந்நிலையில், எட்டாவது ஊதியக்குழு (8th Pay Commission) அமைப்பது குறித்து பல்வேறு வதந்திகளும், அரசியல் அழுத்தங்களும், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளும் வலுப்பெற்றன.
இதன் முக்கிய கவனம் ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதிய மாற்றம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொலைதூர வேலை முறைகளுக்கு ஏற்ற கொடுப்பனவுகள், பெண் ஊழியர்களுக்கான சிறப்பு சலுகைகள் மற்றும் ஓய்வூதிய மறுசீரமைப்பு ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ஊதியக்குழுக்களைப் போலவே, இதுவும் ஒரு உயர்மட்டக் குழுவாக அமைக்கப்பட்டு, நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஃபிட்மென்ட் ஃபேக்டரை 2.57-லிருந்து 3.00 அல்லது அதற்கு மேல் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது.

இது குறைந்தபட்ச ஊதியத்தை 18,000 ரூபாயிலிருந்து 26,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் உயர்த்த வழிவகுக்கும். இந்த நிலையில், எட்டாவது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரை விதிமுறைகளை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை IIT பேராசிரியர்களுக்கு விஞ்ஞான் புரஸ்கார் விருது... மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
எட்டாவது ஊதிய குழுவுக்கு மூன்று உறுப்பினர்கள் நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் பிரஸ் கவுன்சில் தலைவருமான ரஞ்சனா பிரகாஷ் தேசாய் எட்டாவது ஊதியக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார். பகுதி நேர உறுப்பினராக ஐ ஐ எம் பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ், உறுப்பினர் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அதிரடியாக களத்தில் இறங்கிய மத்திய அரசு..!! ஓலா, ஊபருக்கு ஆப்பு வைக்க வருகிறது 'பாரத் டாக்ஸி'..!!