மும்பை மற்றும் அஹமதாபாத் விமான நிலையங்களில் பாதுகாப்பு தொடர்பான பணிகளிலும், சரக்குகளை கையாளும் பணியிலும் ஈடுபட்டிருந்த துருக்கியைச் சேர்ந்த செலிபி நிறுவனத்துடன் இருந்த ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் உடனடியாக ரத்து செய்ததாக அறிவித்துள்ளது. இதுவரை செலிபி நிறுவனம் செய்து வந்த அனைத்துப் பணிகளையும் தங்களிடம் எந்தவிதமான சிக்கலும் இன்றி ஒப்படைத்துச் செல்லுமாறு செலிபி நிறுவனத்தை அதானி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்துக்கு எதிராக தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள், ட்ரோன்களை வழங்கி, பாகிஸ்தானுக்கு துருக்கி நாடு உதவியது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில்மக்களின் கோபம் துருக்கி பக்கம் சாய்ந்துள்ளது.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிரதமரின் பயம் தான் காரணம்... ராகுல்காந்தி சரமாரி புகார்!
துருக்கியை ஒட்டுமொத்தமாக இந்தியர்கள் ஒதுக்கத் தொடங்விட்டனர். துருக்கி நாட்டுக்கு சுற்றுலா செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் டிக்கெட்டை ரத்து செய்தனர். டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகம் துருக்கி பல்கலைக்கழகத்துடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து புறக்கணித்தது.

இந்நிலையில் விமாநிலையங்களில் சரக்குப் பாதுகாப்பு, சரக்குகளை விமானங்களில் ஏற்றுதல், இறக்குதல் பணியில் இருந்த துருக்கியின் செலிபி நிறுவனத்துடன் செய்திருந்த ஒப்பந்தத்தையும் அதானி நிறுவனம் ரத்து செய்தது.
மும்பை மற்றும் அகமதாபாத் விமானநிலையங்களின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ துருக்கியின் செலிபி நிறுவனத்துக்கு பாதுகாப்பு தொடர்பான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால் உடனடியாக அந்த நிறுவனத்துடந் நாங்கள் செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம்.

மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம், ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் சரக்குகளை கையாளுதல், சோதனை செய்தல், உள்ளிட்ட பணிகளை செய்து வந்த செலிபி நிறுவனத்துடன் அதானி நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், உடனடியாக அனைத்துப் பணிகளையும் எந்தவிதமான இடையூறும் இன்றி எங்கள் ஊழியர்களிடம் ஒப்படைக்க கேட்டுள்ளோம். பயணிகளுக்கு எந்தவிதமான இடையூறும் இன்றி, எஸ்விபிவிஏ நிறுவத்திடம் வழங்கக் கோரியுள்ளோம். செலிபி நிறுவத்தில் பணியாற்றி அதே ஊழியர்கள் எஸ்விபிவிஏ நிறுவனத்துக்கு மாறிக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
அதானி நிறுவனம் திருவனந்தபுரம், குவஹாட்டி, மங்களூரு, ஜெய்பூர், லக்னெள ஆகிய விமான நிலையங்களில் செலிபி நிறுவனத்திடம்தான் பாதுகாப்பு அனுமதி, சரக்குகளை சோதனை செய்தல், கையாளுதல் பணியை அதானி ஏர்போர்ட் நிறுவனம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பல பேருக்கு இன்று தூக்கம் போயிருக்கும்..! விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில் பிரதமர் பேச்சு..!