கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 8900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் துறைமுகம் திறக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் திருவனந்தபுரத்தில் கட்டப்பட்டுள்ளது. விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

இதன் திறப்பு விழாவில் தொழிலதிபர் அதானி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கேரளாவில் பிறந்த ஆதி சங்கராச்சாரியாருக்கு தனது மரியாதையை செலுத்துவதாக கூறினார். கேரளாவில் ஒருபுறம் வாய்ப்புகளை அள்ளித் தரும் பெரிய கடலும், மறுபுறம் இயற்கையும் உள்ளது என்றும் புதிய யுகத்தின் வளர்ச்சியாக கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் அமையும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அச்சா... அம்மே...இருட்டில் அலறிய சிறுமி! சட்டென ஓடிய காம மிருகங்கள்.

இந்தியா கூட்டணியின் வலுவான தூணாக கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளார்., விழா மேடையில் பினராய் விஜயன், காங்கிரஸின் சசிதருர் என இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் தன்னுடன் மேடையை பகிர்வதால் பலரின் தூக்கம் பறிபோகும் என்றும் பேசினார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: மதிய உணவால் தப்பித்த கேரள குடும்பத்தினர்: பரபரப்பு தகவல்கள்..!