அதிமுக தலைமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியுள்ள எஸ்.பி. வேலுமணி தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 22 பேர் கொரோனா உத்தரவை மதிக்கவில்லை என்று அப்போது, முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற வலியுறுத்தினார். கொறடாவின் உத்தரவை மதிக்காததால் 22 பேர் மீதும் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெரும்பான்மை உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தான் முக்கியம் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய எஸ் பி வேலுமணி, கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரையும் நீக்க முடியாது என்பதே சட்டம் என தெரிவித்தார். இந்த கருத்து வேறுபாடு சமயத்தில் யாரை கட்சியில் இருந்து நீக்கினாலும் சேர்த்தாலும் செல்லுபடி ஆகாது என்றும் கூறியுள்ளார்.

அதன்படி தான் தாங்கள் செயல்படுவதாகவும், கடந்த பதினொன்றாம் தேதி யார் எந்த பொறுப்பில் இருந்தார்களோ அதே பொறுப்பு தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். இபிஎஸ் எடுத்துள்ள எந்த நடவடிக்கையும் செல்லாது என மக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். பொதுக்குழுவைக் கூட்டி தோழிக்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அதிமுகவில் பூகம்பம்..! EPS, வேலுமணி தரப்பு போட்டா போட்டி.! சபாநாயகரை சந்திக்க திட்டம்..!
தொடர்ந்து பேசிய, நத்தம் விஸ்வநாதன், ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் நீக்கி விடுவதே அவரது வழக்கம் என எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்தார். எடப்பாடி பழனிச்சாமி நீக்குவதாக சொன்னால் கூட அதில் கையெழுத்து போட்டு விடுவார் என்றும் அந்த அளவுக்கு அது பழக்க தோஷம் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: பிளவுபட்ட அதிமுக...! செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் அதிமுக EX.MP ஐக்கியம்..!