சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது என்று அதிமுக கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா என்று கேள்வி எழுப்பி உள்ளது. அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா என்றும் கேட்கப்பட்டுள்ளது.
அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே., பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார் என்றும் 1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா என்றும் கேட்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள் என்று கேட்டுள்ளது.
இதையும் படிங்க: பொதுச்செயலாளர் பதவியும் காலி...? - இபிஎஸுக்கு எதிராக காய் நகர்த்தும் சி.வி.சண்முகம்... எடப்பாடிக்கு பறந்த நேரடி வார்னிங்...!
உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சரமாரி கேள்விகளை அதிமுக முன்வைத்துள்ளது. இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது என்றும் இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செங்குத்தாக பிளவுபட்ட அதிமுக..! பரம எதிரி திமுகவுடன் சேர "வற்புறுத்திய EPS"..! எகிறும் குற்றச்சாட்டுகள்..!