ராஜஸ்தானின் பார்மர், ஜெய் சால்மர், பஞ்சாபின் ஃபெரோஸ்பூர், ஜம்முவின் உதம்பூர், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின. போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்துமாயின் எதிர் தாக்குதல் நடத்த எல்லை பாதுகாப்பு படைப்பு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதாக அங்கு வசிக்கும் சிலர் தகவல் தெரிவித்து உள்ளனர்.

உதம்பூர், அக்னூர், பூஞ்ச், ரஜோரி, ஜம்மு, ஆர் எஸ் புரா, கத்துவா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீநகரில் பயங்கர வெடி சட்டம் கேட்பதாக காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உறுதிப்படுத்தி இருந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் என்ன ஆனது என்றும் இது போர் நிறுத்தமே இல்லை என்றும் ஆவேசத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஸ்ரீநகரில் எதிர் தாக்குதல் நடத்த வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதிரக் கொடை உயிர்க் கொடை...ராணுவ வீரர்களுக்கு உதவ வாருங்கள்...சண்டிகர் நிர்வாகம் அழைப்பு!

இதையும் படிங்க: பாக். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி..! உமர் அப்துல்லா அறிவிப்பு..!