இந்திய எல்லைப் பகுதியில் 10 ட்ரோன்கள் தென்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவின் எல்லை பகுதியை நோக்கி வரும் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு துல்லியமாக செயல்பட்டு டோன்களை விழுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சினார் படை பிரிவு தலைமையகத்தை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை இந்தியா முறியடித்துள்ளதாகவும் ட்ரோன்களை வானிலையே வழிமறித்து வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கி அழிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது ஸ்ரீநகரை பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும் படகு இல்லத்தில் இருந்த போது பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் காஷ்மீர் சுற்றுலா சென்ற தமிழர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். கட்ச் மாவட்டத்தில் பல ட்ரோன்கள் காணப்பட்டதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மின்தடை செய்யப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் வீதி அடைய வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா மீது ஓயாமல் ட்ரோன் தாக்குதல்.. பாகிஸ்தானின் ட்ரோன் ஏவுதளத்தை துவம்சம் செய்து அழித்த இந்தியா!

இதையும் படிங்க: ப்ளீஸ் பதற்றத்தைக் குறைங்க.. நிதானமா இருங்க.. இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜி7 கூட்டமைப்பு அட்வைஸ்!