எய்ட்ஸ் என்பது மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ். (Human Immunodeficiency Virus - HIV) என்ற வைரஸால் ஏற்படும் ஒரு நாள்பட்ட நோயாகும். இந்த வைரஸ் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பை தாக்கி, படிப்படியாக அதை பலவீனப்படுத்துகிறது. HIV தொற்று ஏற்பட்டால் உடனடியாக எய்ட்ஸ் வருவதில்லை. பல ஆண்டுகள் கழித்து, சிகிச்சை இல்லாத நிலையில், நோயெதிர்ப்பு அமைப்பு முற்றிலும் சேதமடைந்து எய்ட்ஸ் நிலைக்கு செல்லும்.
இன்று, மருத்துவ முன்னேற்றங்கள் காரணமாக, HIV தொற்று உள்ளவர்கள் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். ஆனால் மருத்துவமனைகளில் கவனக் குறைவோடு செயல்படும்போது ரத்தத்தை மாற்று ஏற்றியதால் எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும். அப்படியாக மத்திய பிரதேசத்தில் ரத்தத்தை மாற்றி இயற்றியதால் நான்கு பிஞ்சு குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ரத்தத்தை மாற்றி இயற்றியதால் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் சட்னா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நான்கு பிஞ்சு குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் ரத்த வங்கியில் பணியாற்றியவர்கள் அஜாக்கிரதையாக ரத்தத்தை மாற்றி ஏற்றியதில் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திமுக மதவெறியால் ஒரு உயிரே போச்சு... எறிவது தீபத்தூண் அல்ல தமிழர்கள்... நயினார் கண்டனம்...!
இந்த விவகாரத்தில் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவர் தேவேந்திர பட்டேல் மற்றும் லேப் டெக்னீசியன்ஸ் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அஜாக்கிரதையால் நான்கு பிஞ்சு குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிகழ்வு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: கணவன் கண்ணெதிரே மனைவிக்கு பாலியல் தொல்லை... ராமேஸ்வரம் மண்ணில் கொடுமை... 2 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்...!