மும்பையில் கனமழை கொட்டித்தீர்க்குது, சாலைகளெல்லாம் வெள்ளக்காடாகி, வாழ்க்கை தடுமாறுது. இந்த சூழலில், கொச்சியில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானம் (AI-2744), தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு தடுமாறி விலகியதால், ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கு.
ஆனாலும், விமானியின் சாமர்த்தியத்தால, எந்த அசம்பாவிதமும் இல்லாம, எல்லா பயணிகளும் பத்திரமா இறங்கியிருக்காங்க. இந்த சம்பவம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் பன்னாட்டு விமான நிலையத்தில் (CSMIA) இன்று காலை 9:27 மணிக்கு நடந்தது.
இந்த விமானம், ஏர்பஸ் A320 (VT-TYA), கொச்சியில் இருந்து காலை 7:43 மணிக்கு புறப்பட்டு, மும்பையில் 9:27 மணிக்கு தரையிறங்கியது. ஆனா, கனமழையால ஓடுபாதை (Runway 09/27) வழுக்கி, விமானம் தரையிறங்கும்போது சுமார் 16-17 மீட்டர் தூரம் புல் மற்றும் மண் பகுதிக்கு தடுமாறி போயிருக்கு.
இதையும் படிங்க: நாடே அழுதப்போ கொண்டாட்டம் ஒரு கேடா! ஏர் இந்தியா ஊழியர்களின் தரம் கெட்ட செயலால் அதிர்ச்சி!
இதுல விமானத்தோட மூணு டயர்கள் வெடிச்சு, இன்ஜினோட கவர் (engine cowling) பகுதியும் சேதமடைஞ்சிருக்கு. இருந்தாலும், விமானி உடனே கட்டுப்பாட்டை மீட்டு, விமானத்தை பாதுகாப்பா டாக்ஸிவே மூலமா பார்க்கிங் பகுதிக்கு கொண்டு வந்துட்டார். 175 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் எல்லாரும் பத்திரமா இறங்கியிருக்காங்க.

ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், “இன்று (ஜூலை 21, 2025) கொச்சி-மும்பை விமானம் AI-2744, கனமழையால தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகியது. ஆனாலும், விமானம் பாதுகாப்பா டெர்மினலுக்கு வந்து, எல்லா பயணிகளும் இறங்கியாச்சு. விமானம் இப்போ பரிசோதனைக்காக நிறுத்தப்பட்டிருக்கு. பயணிகளோட பாதுகாப்பு தான் எங்களுக்கு முதல் முக்கியம்,”னு சொல்லியிருக்காங்க.
மும்பை விமான நிலைய அதிகாரிகளும், “காலை 9:27 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. உடனே எமர்ஜென்ஸி டீம்கள் செயல்பட்டு, பயணிகளை பாதுகாப்பா மீட்டாங்க. முதன்மை ஓடுபாதையில் சிறு சேதம் ஏற்பட்டதால, மாற்று ஓடுபாதை (14/32) இயக்கப்பட்டிருக்கு,”னு தெரிவிச்சிருக்காங்க.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), மும்பை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து, “மிதமான முதல் கனமழை வரைக்கும் பெய்யும்”னு கணிச்சிருக்கு. இந்த மழையால, மும்பையில் இன்று காலை புறநகர்களில் 115 மிமீ மழை பதிவாகியிருக்கு, ஆனா கொலாபாவில் 11 மிமீ தான். இந்த சம்பவத்தால், முதன்மை ஓடுபாதை சிறு சேதமடைஞ்சதால, பராமரிப்பு வேலைகள் தொடங்கியிருக்கு. இதனால, விமான நிலைய நடவடிக்கைகள் மாற்று ஓடுபாதை மூலமா தொடருது.
இந்த விபத்தை விசாரிக்க, இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் (DGCA) ஒரு குழுவை அனுப்பியிருக்கு. 2023 செப்டம்பரில், விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த ஒரு லியர்ஜெட் விமானமும் இதே மாதிரி மழையில் தடுமாறியிருக்கு. இப்போதைக்கு, பயணிகள் பத்திரமா இருக்கறது ஒரு ஆறுதல், ஆனா இந்த மழை மும்பையை தொடர்ந்து புரட்டி எடுக்குது!!
இதையும் படிங்க: ஆறாத வடு.. மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் விடுதலை.. முடிந்தது 19 ஆண்டு சிறைவாசம்..!