பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், ராணுவத்துக்கு எதிராகவும் இந்திய ராணுவம் எடுத்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவில் தயாரித்த உள்நாட்டு ஆயுதங்கள், ஏவுகணைகள் சிறப்பாக செயல்பட்டு, சீனா, துருக்கி ஆயுதங்களையே பின்வாங்கச் செய்துள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இந்தியர்கள் 26பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள், தீவிரவாதிகளின் கட்டமைப்புகள், தீவிரவாதிகள் அழிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்களை ஏவிவிட்டு இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தியது.
இதையும் படிங்க: பாகிஸ்தானின் 400 தற்கொலை ட்ரோன்கள்.. இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது எப்படி?
இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வானிலையே பாகிஸ்தான் ராணுவத்தின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இந்த போரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறுகிய தொலைவு செல்லக்கூடிய ஆகாஷ் ஏவுகணை, சீனா, துருக்கி தயாரிப்பு ஆயுதங்களையே விஞ்சிவிட்டது.

சீனா, துருக்கியில் இருந்துதான் பாகிஸ்தான் பெரும்பகுதி ஆயுதங்களை கொள்முதல் செய்கிறது, ட்ரோன்களையும் வாங்குகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீனாவின் ஹெச்கியூ-9 ரக ட்ரோன்களை இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணைகள் வானிலேயே வெற்றிகமராக இடைமறித்து தாக்கி அழித்தன.
இது குறித்து மத்திய தகவல் அமைச்சகத்தின் பிரிவான பிஐபி வெளியிட்ட அறிவிப்பில் “பாகிஸ்தான் ராணுவம் ஏவிய ஏவுகணைகள், ட்ரைன்கள் ஆகியவற்றை இந்திய ராணுவம் எந்தவிதமான இழப்பின்றி தாக்கி அழித்தது. இந்தியாவின் கண்காணிப்பு முறை, திட்டமிடல், செயல்படுத்துதல் சிறப்பாக இருந்தது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக இந்திய ராணுவம் பயன்படுத்தி நவீன ஆயுதங்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், ஏவுகணைகள் இந்த தாக்குதலை வெற்றிகரமாக்கியுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து வாங்கி பயன்படுத்திய பாகிஸ்தான் ஏவுகணைகளை, ட்ரோன்களை வெறும் 23 நிமிடங்களில் இந்திய விமானப்படை இடைமறித்து தாக்கி அழித்துள்ளது. போர் நிறுத்தம் இரு நாடுகளுக்கு இடையே அமலுக்கு வந்தபின் கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் எல்லைப்பகுதிகள் மிகுந்த அமைதியாக இருந்து வருகிறது. இரு நாடுகளின் ராணுவத் தலைவர்களிடையே அடுத்தக் கட்ட பேச்சு குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
இந்தியாவைப் பொருத்தவரை பாதுகாப்புத்துறை எப்போதும் இல்லாத வலிமையுடன் இருக்கிறது. குறிப்பாக பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் திட்டம் கொண்டுவந்தபின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2013-14ல் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி ரூ. 686 கோடியாக இருந்தது, இது 2024-25ம் ஆண்டில் ரூ.23,622 கோடியாக 34 மடங்கு அதிகரி்த்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகள், மேற்கு ஆசியாவில் இருக்கும் நாடுகள் இந்தியா தயாரித்த ஆகாஷ் ஏவுகணை மற்றும் பிரம்மோஸ் ஏவுகணையை விலைக்கு வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள் என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை பாகிஸ்தான் புரிந்து கொண்டது. சீனாவின் பிஎல்-15 ஏவுகளையுயம், துருக்கியின் ஆள்இல்லா விமானங்களையும், நீண்டதொலைவு ராக்கெட்டுகள், குவாட்காப்டர் ஆகியவற்றி ஆகாஷ் ஏவுகணைகள் வீழ்த்தின. இந்தியாவின் எல்லைஓரப்பகுதிகளில் இந்த ஆயுதங்களின் உடைந்த பாகங்கள் கிடந்ததை ராணுவம் கண்டுபிடித்தது.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர்: பாக். தீவிரவாத முகாம்கள் கடும் சேதம்.. வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்..!