பஹல்கான் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சென்று தீவிரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. இதற்கு பதிலடியாக இந்தியாவின் எல்லை ஓர மாவட்டங்களில் பாகிஸ்தான் 300 முதல் 400 வரையிலான தற்கொலை ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

துருக்கி நாட்டின் அசிகார்ட் நிறுவனத்தின் சோங்கர் தற்கொலை ட்ரோன்ள் மூலம் இந்தியப் பகுதிக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த ட்ரோன்கள் இலக்கை தாக்கியவுடன் வெடித்து சிதறிவிடும் தன்மை கொண்டதாகும். சிறிய ரக ட்ரோன்கள் கூட்டமாக வரும்போது அதைத் துல்லியமாகக் கணித்து அழிக்க இந்திய விமானப்படையும், அதன் ஒருங்கிணைந்த வான்வெளி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுமுறையும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.
இதையும் படிங்க: போருக்கு தயாராகிறதா பாக்.? எல்லையில் வீரர்கள் குவிப்பு.. இந்தியாவின் பதில் என்ன?
தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில் “பாகிஸ்தான் சார்பில் 500 ட்ரோன்கள் இந்திய பகுதிக்குள ஏவப்பட்டிக்கும். இவை க்வாடுகாப்டர்ஸ் வகையைச் சேர்ந்தவை. இந்தியாவின் மேற்கு எல்லையில் 36 இடங்களில் இருந்து இந்த குவாட்காப்டர்ஸ் வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் 12 மணிவரை ஏவப்பட்டன. இந்த சிறியரக ட்ரோன்களை ராடர்களால் கண்டுபிடிப்பது கடினம் ஏனென்றால் ட்ரோன்களின் குறைந்த எடை, வேகம் குறைவாக இருப்பதால் ரேடாரின் கதிர்வீச்சில் சிக்காமல் எதிரிநாட்டுக்குள் வந்து தாக்குதல் நடத்தும் தனித்தன்மை கொண்டது.

ஆனால், இந்த சிறியரக ட்ரோன்களையும் கண்டுபிடித்து தாக்கி அழிக்கும் வல்லமையை ஆயுதங்களை சமீபத்தில் இந்திய ராணுவம் தனது படையில் வைத்திருந்ததால் எளிதாக தாக்கி அழிக்க முடிந்தது. இந்த சோங்கர் ட்ரோன்கள் துருக்கி ராணுவத்தில் அசிஸ்கார்டால் தயாரிக்கப்படுபவை. இந்த வகை ட்ரோன்களை 3 கி.மீ சுற்றளவில் மட்டுமே இயக்க முடியும். இந்த வகை ட்ரோன்களை அழிக்கவே, இந்திய ராணுவம் சார்பில் “எல்-70”, “ஜூ-23”, மற்றும் சிக்லா வகை வான்பாதுகாப்பு துப்பாக்கிகள் வாங்கப்பட்டிருந்தன. இந்த வகை நவீன வான்பாதுகாப்பு துப்பாக்கிகள் மூலம்தான் சிறிய ட்ரோன்கள் அழிக்கப்பட்டன.
உதாரணமாக, எல்-70 ரக வான்பாதுகாப்பு துப்பாக்கிகளுக்கு தேவையான தொலைநோக்கி் மற்றும் ஹைட்ராலி்க் கருவிகளை பெல் நிறுவனம் தயாரித்துக் கொடுத்து சமீபத்தில் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டது. இந்த வகை துப்பாக்கிகள் எதிரி இலக்குகள் தொலைவில் வரும்போதே கண்டுபிடித்து அழிக்கக்கூடியது.

வான் பாதுகாப்பு நெட்வொர்க் 3 தளங்களாக பணியாற்றுகிறது. முதலாவதாக துப்பாக்கி அல்லது சிறிய ஏவுகணை தாக்குதல், 2வதாக நடுத்தர தொலைவு தாக்கும் ஏவுகணை, 3வதாக நீண்டதொலைவு தாக்கும் ஏவுகணைகள். இதில் நீண்டதொலைவு தாக்கும் ஏவுகணைகள் “எஸ்-400” வகை 400 கி.மீ வகை சென்று இலக்கை தாக்கி அழிக்கக்கூடியது.
நடுத்தர தொலைவு ஏவுகணைகள் என்பது 70 கி.மீ வரை சென்று தாக்கக்கூடியது, ஆகாஷ் வகை ஏவுகணைகள் 25கி.மீ வரை சென்று தாக்கக்கூடியது. இஸ்ரேலின் “சைடர் சாம்” வகை ஏவுகணை 10கி.மீதொலைவு வரை தாக்கக்கூடியது. இது தவிர குறைந்த தொலைவு இலக்குகளை அழிக்கும் “இக்லா-எஸ்”, “ஸ்டீரிலா” வகை ஆயுதங்களும் உள்ளன.

வானில் வெடிக்கும் ஏவுகணைகள், லேசர்கள், மைக்ரோவேவ் ஆயுதங்கள், ஸ்மார்ட் ஆயுதங்கள் என ஏராளமான வகைகள் உள்ளன. இதில் உக்ரைன்-ரஷ்யா போரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட “எல்-70” மற்றும் “ஜூ-23” ஏர் டிபென்ஸ் துப்பாக்கிகளைத்தான் இந்திய ராணுவம் அதிகமாகக் கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகிறது” எனத் தெரிவித்தனர்.
வான் பாதுகாப்புபிரிவின் இயக்குநர் லெப்டினென்ட் சுமர் இவான் டிகுன்ஹா சமீபத்தில் கூறுகையில் “ஸ்மார்ட் ஆயுதங்கள் என்பது அடுத்தவகை இலக்குகள், ஒவ்வொரு ரவுண்டு குண்டுகளும் புரோகிராம் செய்யப்பட்டிருக்கும். 17 ரவுண்டு குண்டுகளின் சக்திகள் ஒரு ரவுண்டு குண்டுக்கள் அடக்கப்பட்டிருக்கும். இந்த வகை துப்பாக்கிகள் எதிரி நாட்டுக்கு உயிரிழப்பை அதிகப்படுத்தும், எடுத்துச் செல்வதும் எளிது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குறுக்கு புத்தியை காட்டும் பாக்., இரவோடு இரவாக போட்ட சதித்திட்டம்.. பஞ்சாப் மக்களுக்கு அச்சுறுத்தல்..!