நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பகல்காம் தாக்குதல் தொடர்பாகவும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
பகல்காம் தாக்குதல், ராணுவ தாக்குதல் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்தார்.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களை ஒட்டுமொத்தமாக அழித்ததாக தெரிவித்தார். மதங்களைக் கேட்ட பின்னர் அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவை கிள்ளுகீரையாக நினைக்கிறார் அமித்ஷா! திருமா டைரக்ட் அட்டாக்..!
குடும்பத்தினர் முன்னிலையில் சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் கொலை செய்ததாகவும் பகல் காம் தாக்குதலுக்கு பழித்தீர்த்ததாகவும் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் மகாதேவ் மூலம் பகல் காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் கூடாரங்களை அழித்ததாகவும் தெரிவித்தார். ஆனால் பாகிஸ்தான் நமது மக்களை கொன்று விட்டதாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.
ஸ்ரீ நகரில் நடத்தப்பட்ட ஆப்பரேஷன் மகாதேவி நேற்று மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறிய அமித்ஷா, பகல் காம் தாக்குதலுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டு வெற்றி கண்டதாக பெருமிதம் தெரிவித்தார்.
மே மாதம் தொடங்கி இந்த மாதம் வரை தீவிரவாதிகளை கண்காணித்து வந்ததாகவும் பகல் காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சுலைமான் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறினார். ஜூலை 22 ஆம் தேதி தீவிரவாதிகளை கண்டுபிடித்து சுற்றி வளைத்ததாகவும் சுலைமான் ஷா, அபூஹம்சா, யாசிர் ஆகிய மூன்று பேர் சுட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களில் இருந்து பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கொடுத்த காசுக்கு மேல கூவுறான்யா… இபிஎஸ்-ஐ கிண்டலடித்த ஸ்டாலின்..!