தங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்சனை ஆறு மாதத்தில் முடிவுக்கு வரும் என சேலத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் உரிமை மீட்பு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ் ,
சேலம் அருகே ஏற்காடு அடிவாரம், செட்டிச்சாவடி பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பைமேட்டை அகற்றாவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப் போவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
இதையும் படிங்க: கறார் காட்டுனேன்... அதான் அன்புமணிக்கு இப்படி ஒரு பேச்சு...! சபாநாயகர் அப்பாவு பதிலடி...!
சேலம் ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள செட்டிச்சாவடி குப்பை கிடங்கை டாக்டர்.அன்புமணி ராமதாஸ் இன்று பார்வையிட்டார். தொடர்ந்து, மாநகராட்சி குப்பை மேட்டை அகற்ற வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செட்டிச்சாவடி குப்பைமேட்டை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும், சட்டவிரோதமாக குப்பைகள் எரிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் சேகரிக்கப்படும் குப்பைகளை செட்டிச்சாவடி பகுதியில் கொட்டுகிறார்கள் . சேலம் மாநகராட்சி மக்கள் தொகை சுமார் 12 லட்சம் இருக்கும். தினமும் 550 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இதற்கு முன்பு மைன்ஸ் பகுதியாக ஆக இருந்த செட்டிச்சாவடி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் மாசு தொற்று ஏற்பட்டுள்ளது.
குப்பைகள் எரிப்பதால் நச்சுப் பொருட்கள் காற்றில் கலந்து புற்றுநோய் நச்சுப்பொருட்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ள நிலையில் இப்படி குப்பைகளை கொட்டி எரிப்பது சரியல்ல. இதன் காரணமாக, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
புற்றுநோய், நுரையீரல் பிரச்னை, சுவாச கோளாறு போன்றவற்றால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதற்கு தீர்வு காண தமிழக அரசுக்கு அக்கறை இல்லை. எத்தனையோ முறை கூறிவிட்டோம் . பலமுறை ஆர்ப்பாட்டமும் நடத்தி விட்டோம். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை .
உடனே இதனை சரி செய்ய வேண்டும் . இந்த திட்டம் தொடர்ந்தால் மாநகராட்சி மேயர் இல்லம், மாநகராட்சி மேயர் அலுவலகம், மாநகராட்சி அதிகாரிகள் அலுவலகம் ,
பகுதிகளில் குப்பைகளை கொட்டி போராட்டம் நடத்துவோம். பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார். இதனால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.
மேட்டூர் உபரி நீர் திட்டம் முழுமையாக இன்னும் செயல்படுத்தவில்லை. ஏற்காடு மலையில் இருந்து வீணாகும் தண்ணீரை சேமித்தாலே,
சேலம் மாவட்டத்துக்கு போதும் .நான்கு டிஎம்சி தண்ணீர் கடலில் தற்போது கலந்துள்ளது. மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள 1,500 ஏரி குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும். கடந்த ஐந்து மாதங்களில் மேட்டூர் அணை ஏழு முறை நிரம்பியுள்ளது. சுமார் 50 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் 50 டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கும்.
டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். நாங்கள் போராடியதால் தான் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. ஆனால் 25 ஆயிரம் சந்து கடைகள் உள்ளன. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அபின், ஹெராயின் போன்ற போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன.
ஒரு பக்கம் டாஸ்மாக், மறுபக்கம் போதை பொருள். இது பற்றியெல்லாம் முதலமைச்சருக்கு தெரியாது. ஆட்சி முடியும் தருவாயில், தற்போது 30 மணல் குவாரிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இன்னும் நான்கு மாதம் தான் இந்த அரசு இருக்கும். அதற்குள் எதற்கு அனுமதி தருகிறார்கள் என தெரியவில்லை.
ரூ. 27 கோடி தான் அரசுக்கு வருமானம் வருகிறது என்கிறார்கள். ஆனால் ஒரு குவாரியில் ஒரு வாரத்தில் இந்த வருமானம் வந்துவிடுகிறது. .வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர் பெயர்கள் மற்றும் இரண்டு இடங்களில் பெயர் உள்ளவர்கள் யார் என கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரியான முறையில் எடுத்திட வேண்டும். நேர்மையாக வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றார்.
வரும் தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும். எங்கள் உட்கட்சி பிரச்னை 6 மாதங்களில் முடிவுக்கு வரும் என்றார்.
இதையும் படிங்க: பார்த்தாலே மனசு வலிக்குது... ஒரு மழைக்கே இந்த கதி..! சௌமியா அன்புமணி வேதனை...!